Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை

கடந்த சில நாட்களாக திருச்சியில் கோவிட் -19 பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. மூன்று மாதங்களுக்குப் பிறகு நகரத்தின் தில்லைநகரில் ஒரு கட்டுப்பாட்டு மண்டலம் நிறுவப்பட்டது. திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்… கல்யாணம் மற்றும் பிற நிகழ்வுகளால் இந்த அதிகரிப்புக்கு காரணம். ஸ்ரீரங்கம் மற்றும் அரியமங்கலம் மண்டலங்கள் ஒப்பீட்டளவில் குறைவான பாதிப்புகளே பதிவாகியுள்ளது. கே-அபிஷேகபுரம் மற்றும் பொன்மலை மண்டலங்கள் தினசரி பதிவாகும் புதிய வழக்குகளில் 50% க்கும் அதிகமானவை.

செப்டம்பர் 18 மற்றும் 20க்கு இடையில், 10-17 புதிய நோய்த்தொற்றுகளை மட்டுமே அறிவித்தது. ஆனால் செப்டம்பர் 21க்குப் பிறகு, கடந்த நான்கு நாட்களில் சுமார் 32 முதல் 46 வரை தொற்று உறுதி செய்பவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளன. திருமணங்கள் மற்றும் நிச்சயதார்த்தங்கள் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் மக்கள் தொற்று பாதிப்பு அதிகம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின்   பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போடப்படாதவர்கள் அல்லது முதல் தவணை மட்டும் தடுப்பூசி போட்டவர்கள். அனைத்து வணிக நிறுவனங்களும் திறந்திருப்பதால், நோய்த்தொற்றின் சரியான ஆதாரத்தை அடையாளம் காண்பது கடினம் என்று சுகாதாரத்துறை அதிகாரி கூறினார்.

இதற்கிடையில், தில்லை நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு கட்டுப்பாட்டு மண்டலம் நிறுவப்பட்டுள்ளது. நுழைவாயில்கள் திறந்திருக்கும் போது பார்வையாளர்களை எச்சரிக்கை செய்ய ஒரு பேனர் வைக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பான உடல்நிலையில் உள்ளனர். அறிகுறியற்றவராகவும், நோயற்றவராகவும் இருந்தால் மட்டுமே வீட்டில் தனிமைப்படுத்தப்படுவது அனுமதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரி கூறியுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *