Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

குழு அமைக்காமல் உள்ள நிறுவனங்களுக்கு ரூ.50,000/- வரை அபராதம் – மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தலை தடுக்கும் சட்டம் 2013-ன்படி 10 நபர்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் (மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், ஜவுளிகடைகள்) தனியார் தொழிற்சாலைகள், தகவல் தொழில் நுட்ப நிலையங்கள், சிறுகுறு நிறுவனங்கள் முதலான அனைத்து பணியிடங்களிலும் பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க உள்ளக குழு அமைக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்படும் பெண்கள் புகார்களை அளிக்க பாதுகாப்பு பெட்டி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி, உள்ளக குழு அமைக்காமல் உள்ள நிறுவனங்களுக்கு ரூ.50,000/- வரை அபராதம் விதிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே (02.09.2024)-குள் இதுவரை உள்ளக குழு அமைக்காத அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளககுழு அமைத்து பாதுகாப்புபெட்டி வைத்திட வேண்டும்.

ஒவ்வொரு அலுவலகத்திலும் வேலை இடத்திலும் அதன் பிரிவு பணியிடங்களிலும் நான்கு உறுப்பினர்கள் கொண்ட உள்ளக புகார் குழு எழுத்து பூர்வ ஆணையில் அமைத்திட வேண்டும் உள்ளக புகார் குழுவானது கீழ்கண்ட விபரப்படி அமைக்க வேண்டும்.

குழுவில் 50% பெண்கள் இருக்கவேண்டும். குழுவின் பதவிக்காலம் 3 ஆண்டுகள். குழுவின் பணிகள் : உள்ளக குழுவானது பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பான புகார் மனுக்கள் மீதான விசாரணை மேற்கொண்டு அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு பணியிடத்தில் பாலியல் தொந்தரவு ஏதும் ஏற்படும் நிலையில் இக்குழு மூலம் தீரவுக்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட விபரப்படி உள்ளக புகார்குழு அமைத்து பாதுகாப்பு பெட்டி வைத்து அவற்றின் விவரங்களை திருச்சிராப்பள்ளி மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு அனுப்பிட வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், 2-வது தளம், திருச்சிராப்பள்ளி தொலைபேசிஎண் : 0431 2413796. இவ்வாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *