திருச்சியில் சுதந்திர மீட்டர் ஆட்டோக்கள் என்ற பெயரில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மீட்டருக்கு குறைந்த கட்டணத்தில் திருச்சி மக்களின் பயன்பாட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தற்பொழுது ஊரடங்கு என்பதால் இந்த சுதந்திர மீட்டர் ஆட்டோக்களின் ஓட்டுநர்கள் இணைந்து தினம் தோறும் ஸ்ரீரங்கம், காவிரி ஆற்றங்கரை பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு உணவு வழங்கி உதவி வருகின்றனர். இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டம் கூறுகையில்… மக்களுக்கு பொது ஊரடங்கு காலத்தில் முழுமையாக எங்களால் உதவிட இயலவில்லை.
ஆனாலும் நாங்கள் அனைவரும் இணைந்து தினம்தோறும் 100 நபர்களுக்கு உணவு வழங்கி வருகின்றோம். சுதந்திர மீட்டர் ஆட்டோக்கள் மூலம் மாதாந்திர தொகை கிடைக்கும் அதை வைத்து ஒவ்வொருவரும் தினந்தோறும் மக்களுக்கு உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
இந்த பொது ஊரடங்கு காலகட்டத்தில் எங்களுக்கு சரியான வருமானம் இல்லா விட்டாலும் முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவுவதே எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx
Comments