Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

நிலவில் நீர் உள்ளதை இந்தியா கண்டுபிடித்தது நிலவிற்க்கு போட்டியில்லை – திருச்சியில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில், நிலாவும், உலக அமைதியும் என்ற தலைப்பில் மாணவிகள் மத்தியில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிறப்புரை ஆற்றினார் 

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்…… சந்திராயன் 3 நிலவை நெருங்கி உள்ளது அது சமயம் நிலாவும், உலக அமைதியும் என்ற தலைப்பில் மாணவர்களிடம் பேச உள்ளேன். 1960 களில் அமெரிக்க – ரஷ்யா இடையே பனிபோர் உட்சத்தில் இருந்தது. தற்போது திரும்ப நிலவை நோக்கிய பயணம் என்பதற்கு விதை போட்டது சந்திராயன் 1 நிலவில் நீர் கண்டு பிடித்தது எனவே திரும்பவும் அனைவரும் நிலவை தாண்டி நிலவின் தென் துருவம் இடத்தை நோக்கி உலக நாடுகள் ரஷ்ய அமெரிக்கா ஜப்பான் கொரியா வளைகுடா நாடுகள் வர உள்ளது 

இந்த பயணம் உலக நாடுகள் அமைதி மற்றும் முன்னேற்றம் குறித்தாக இருக்கும். வெப்ப மண்டலங்களான வளைகுடா நாடுகள் எண்ணெய் வளத்தால் மாற்றம் அடைந்து மனிதர்கள் வாழ்வதற்கான மாற்றம் உருவானது. அதேபோல நிலவிலும் அந்த மாற்றம் நிகழலாம். நிலவை சந்திராயன் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நிலவைத் தாண்டி, தென் துருவத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். பல நாடுகளும் இதற்கான பயணத்தை தொடங்கியுள்ளனர். நிலவில் நீர் இருப்பதற்கான ஆதாரம் மற்றும் பிற மூலப் பொருட்களின் இருப்பு குறித்த நோக்கத்தில் இந்த பயணம் உள்ளது. அறிவியல் அடுத்த கட்டமாக போவதற்கும், மனிதன் மீண்டும் நிலாவிற்கு செல்லும் வகையில் இம்முயற்சி அமையும்.

நிலாவை விண்வெளியில் பிரிக்கப்பட இன்னொரு கண்டமாக நான் பார்கிறேன். இந்தியாவை கண்டுபிடிக்க வந்த கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்து போல அமெரிக்க கண்டுபிடிக்க தவறிய நிலவில் நீர் கண்டுபிடித்து உள்ளோம் எனவே இந்திய கண்டுபிடித்த இன்னொரு அமெரிக்காவாக நிலவை பார்க்கிறேன். மேலும் நிலவில் விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைக்க முன்னெடுப்பில் உள்ளது அதில் இந்தியாவும் பங்குபெறும். இளைஞர்கள் இதில் ஆர்வம் காட்டினால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மேலும் வளர்ச்சி அடையும். உலக அமைதிக்கான இடமாக நிலவு இருக்கும். அதில் இந்தியா முன்னோடியாக விளங்கும்.

அனைத்தும் நல்ல படியாக உள்ளது. சந்திராயன் இறங்கக்கூடிய இடம் கரடு, முரடாக இல்லாமல் தரையிறங்க ஏதுவாக பார்த்துள்ளோம். சந்திராயன், லூனா இவற்றிற்கிடையே போட்டி என்று சொல்ல முடியாது. கிட்டத்தட்ட இரண்டும் ஒரே மாதிரியான பயணத்தில் தற்போது உள்ளது. இஸ்ரோவில் பயன்படுத்தப்படும் ராக்கெட்டின் வேகம் குறைவாக இருந்த போதிலும், வெற்றி வாய்ப்பு சிறப்பாக உள்ளது.எனவே தான் PSLV, GSLV ராக்கெட்டுகளை எல்லாவற்றிற்கும் பயன்படுத்துகிறோம் என்றார். சந்திராயன் 3 நிலவின் தென் துருவத்தில் பத்திரமாக இறங்கும் வகையிலும், எதிர்காலத்தில் சந்திராயன் 4 நிலவில் இறங்கி அங்கு கிடைக்கும் பொருட்களை பத்திரமாக பூமிக்கு எடுத்து வரும் வகையிலும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *