மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், திருச்சியில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் சனநாயகம் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்தியா கூட்டணி நாடு முழுவதும் உருவாகியிருந்தாலும் தமிழ்நாட்டில் கூடுகின்ற முதல் இந்தியா கூட்டணியின் கூட்டத்தை திருமா நடத்தியுள்ளார்.
நாடு எந்த அளவு ஆபத்தான நிலையில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். ஜனநாயகத்தை காக்க போர் பிரகடனத்தை நடத்த கூடிய நிலையில் உள்ளோம் அப்படி போர் பிரகடனத்தை நடத்த தான் இந்திய கூட்டணி. 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால் வருகின்ற 2024 தேர்தலில் பாஜகவுக்கு மட்டும் மல்ல அதற்கு ஒத்து ஊதுகிற அதிமுக போன்ற கட்சிகளுக்கும் ஒரு சீட்டில் கூட டெப்பாசிட் வாங்க முடியாத நிலையை உருவாக்க வேண்டும்.
ஆளுநரை வைத்து ஆட்டம் காட்டினாலும் அண்ணாமலை கூத்தடித்தாலும் வரக்கூடிய தேர்தலில் அவர்களுக்கு முகவரியை இல்லாமல் இருக்க கூடிய நிலையை இந்தியா கூட்டணி உருவாக்கும். ஜனநாயகம் தேர்தல், அரசியல் களத்தில் மட்டும் மல்ல ஒவ்வொரு கிராமத்திலும் வெற்றிபெற வேண்டும். நாடு முழுவதும் ஜாதிய அடக்குமுறைகள் கொட்டிக்கிடக்கும் நிலை தற்போதும் உள்ளது. அது கேவலம் அவமானம்
அரசியல் களத்தில் சட்டமன்ற நாடாளுமன்ற மட்டுமின்றி ஜனநாயகம் அனைவருக்கும் சமம் என்றும் நிலையை உருவாக்க வேண்டும். வர்ணாசிர தர்மத்தை சவ குழிக்கு அனுப்ப இணைந்து பணியாற்ற வேணடும் என்றார்.
Comments