அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்தில் நடக்கும் குளறுபடிகளை கண்டித்தும், நான்கு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்களை உடனடியாக நியமித்திட ஆளுநருக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுத்திட வேண்டும் எனவும், நிதி பிரச்சனையால் சிக்கி தவித்து வரும் மாநில பல்கலைக்கழகத்தை பாதுகாக்க வேண்டும் எனவும்,
இந்திய மாணவர் சங்கம் இன்று மாநில தழுவிய போராட்டத்தை அனைத்து பல்கலைக்கழகத்தின் முன்பு முன்னெடுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் பாரதிதாசன் பல்கலைக்கழகம் நுழைவாயும் முன்பு இந்திய மாணவர் சங்கம் மாவட்டத் தலைவர் சூர்யா தலைமையில் நடைபெற்றது.
போராட்டத்தில் மாநிலச் செயலாளர் தோழர் அரவிந்த்சாமி, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் தோழர் ஜனா, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் தோழர் ராம் மற்றும் மாநில குழு உறுப்பினர் தோழர் மாரியம்மாள் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள். இறுதியாக போராட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் தோழர் ஆமோஸ் நன்றியுரை ஆற்றி போராட்டத்தை நிறைவு செய்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments