தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் சுமூகமான முறையில் நடைபெறவும் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
Advertisement
அந்த வகையில் இன்று உத்ரகாண்ட் மாநிலத்திலிருந்து இந்தோ-திபெத் காவல் படையை சேர்ந்த 10 கம்பெனிகள் திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்திற்கு வந்தனர்.
அவர்கள் அனைவரும் திருச்சியிலிருந்து கரூர்,அரியலூர்,பெரம்பலூர்,தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வாகனங்களில் பிரித்து அனுப்பப்பட்டனர்.
Advertisement
இவர்கள் அனைவரும் விபின் குமார் தலைமையில் 936 பேர் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை தொடர்ந்து இதே போன்று மேலும் இரண்டு ரயில்களில் பாதுகாப்பு படை வர உள்ளதாக தெரிவித்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
Comments