திருச்சிராப்பள்ளி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம், கல்லகம் காளியம்மன் கோயில் தெருவில் பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தை பெற்றோர்களால் கைவிடப்பட்ட நிலையில் சைல்டுலைன் மூலம் மீட்கப்பட்டு இலால்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் சிகிச்சைக்காக திருச்சிராப்பள்ளி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, (29.04.2023) அன்று திருச்சிராப்பள்ளி குழந்தைகள் நலக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டு மிருதுலாஸ்ரீ என்று பெயரிடப்பட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தைகள் நலக்குழுவின் தற்காலிக பராமரிப்பு ஆணை (Temporary Custody Order) வாயிலாக அரியலூர் அடைக்கலமாதா சிறப்பு தத்துவள மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
இக்குழந்தையை பற்றிய விவரங்கள் மற்றும் பெற்றோர் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் இவ்வறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு தகவல் தெரிவிக்கலாம்.
மேலும், குழந்தையை உரிமை கோரி எவரும் தொடர்பு கொள்ளாத நிலையில், குழந்தையை சட்டப்படி தத்து கொடுப்பதற்கு தடையில்லா சான்று வழங்கப்படும் என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : தலைவர்/உறுப்பினர்கள் குழந்தைகள் நலக்குழு, கலையரங்கம் வளாகம், மெக்டொனால்டு ரோடு, கண்டோன்மெண்ட், திருச்சிராப்பள்ளி – 1 (0431-2413819 / 98944 87572)
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, கலையரங்கம் வளாகம், மெக்டொனால்டு ரோடு, கண்டோன்மெண்ட், திருச்சிராப்பள்ளி – 1 (0431-2413055 / 94452 98465)
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments