சீர்மிகுநகரத் திட்டத்தில் பொதுமக்களுக்கான நடைபாதைக்கு உகந்த
புதுமையான சாலைகள் வடிவமைக்கும் போட்டி
மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் மாநகர பகுதிகளில் பொதுமக்களுக்கான புதுமையான நடைபாதை சாலைகளை வடிமைத்து தரும் அறிவுத் திறன் போட்டிக்கு இந்திய அளவில் மொத்தம் 113 மாநகரங்கள் மத்திய அரசின் நகர்புற வீட்டுவசதித் துறை அமைச்சகம், புதுடெல்லி மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதில், திருச்சிராப்பள்ளி நகரமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இவ்வறிவு திறன் போட்டியில் பங்கு கொள்பவர்கள் பின்வருபவற்றை கருத்தில் கொண்டு புதுமையான நடைபயிற்சி சாலைகளை வடிமைத்திட வேண்டும். ( பாதுகாப்பு, உள்ளூர் சுற்றுச் சூழழுக்கான வடிமைப்பு மற்றும் வாழ்வாதாரம்)
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள பின்வரும் இரண்டு முக்கிய சாலைகள் இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
1.கரூர் புறவழி இணைப்பு சாலை – (தில்லைநகர் சாஸ்திரி ரோடு போக்குவரத்து சிக்னல் முதல் டாக்டர் கலைஞர் அறிவாலயம் வரை)
2. லாசன்ஸ் சாலை – (அண்ணா நகர் இணைப்பு சாலை சந்திப்பு முதல் மத்திய பேருந்து நிலையம் வரை) மற்றும் (மாவட்ட நீதிமன்றம் முதல் கன்டோன்மென்ட் ஒத்தக்கடை போக்குவரத்து சிக்னல் வரை)
இப்போட்டியில் கலந்து கொண்டு மிக சிறப்பான புதுமையான நடைபாதை சாலைகளை வடிவமைத்து தருபவர்களுக்கு (ஒவ்வொரு சாலைகளுக்கும் தனித்தனியாக) முதல் பரிசு தொகை ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசு தொகை ரூ.75,000/- மற்றும் மூன்றாம் பரிசு தொகை ரூ.50,000/- வழங்கப்படும்.
இவ்வறிவுத் திறன் போட்டியில் கலந்து கொள்பவர்கள்(<https://smartnet.niua.org/ indiastreetchallenge/cities/tiruchirappalli/>) கணினி வலைத்தளத்தில் .12.07.2021 க்குள் பதிவு செய்து கலந்து கொள்ளலாம் என ஆணையர் அவர்களால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
Comments