தமிழ்நாடு சட்டப் பேரவையின் பொதுக்கணக்குக்குழு தலைவர் செல்வப் பெருந்தகை மற்றும் உறுப்பினர்கள் திருச்சி மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முதலாவதாக மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த அவர்கள் மருத்துவமனையின் கட்டமைப்பு, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை,
மருத்துவ வசதிகள், அரசு மருத்துவமனை ஊழியர்களின் குறைகளை கேட்டு அறிந்தனர். மருத்துவமனையில் உள்ள பல்வேறு வார்டுகளுக்கு சென்று ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து கோ அபிஷேகபுரம் பகுதியில் உள்ள மகளிர் விடுதி, நவலூர் குட்டப்பட்டு பகுதியில் உள்ள அன்பில் தர்மலிங்கம் வேளாண் மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலும், ஸ்ரீரங்கம் பஞ்சகரை சாலையில் உள்ள ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் நடைபெற்ற வரும் பணிகளையும், பெரிய மிளகுபாறை பகுதியில் உள்ள அரசு ஆதிராவிட பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.
இறுதியாக இன்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை தலைமை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், சட்டமன்ற பேரவை பொதுக்கணக்குக்குழு உறுப்பினர்கள் காந்தி ராஜன், சரஸ்வதி, சிந்தனைச் செல்வன், மரகதம், குமரவேல், மாரிமுத்து, ராஜமுத்து, வேல்முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments