தந்தை பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்றன ..மாணவர்களின் திறனை மேம்படுத்தும் அளவில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன ..
பறை, முக ஓவியம் வரைதல்,இசை கருவிகள் வாசித்தல், தொடர்பான போட்டிகளில் ஆறு கல்லூரிகளின் மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.அதிகப்படியான புள்ளிகளைப் பெற்று திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதல் வெற்றியாளர் கோப்பையை கைப்பற்றியது.முதல் அமர்விற்கு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்துறை பேராசிரியர் முனைவர் லாரா டெமரெஸ் செல்ல ஜோதி கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் ..
அவர் பேசும்போது தகவல் தொடர்பு மூலம் பெறும் ஆங்கிலப் புலமை பற்றியும் தற்காலத்தில் தகவல் தொடர்பின் பங்கு பற்றியும் உரையாற்றினார்..ஆங்கிலத்துறை பேராசிரியர் கீதாஞ்சலி அவர்கள் வரவேற்புரை நல்கினார் ..முனைவர் உமாராணி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். முனைவர் ராதா முனைவர் பார்வதி ..அறிமுக உரையாற்றினார்.
தூய வளனார் கல்லூரியின் ஆங்கிலத்துறை பேராசிரியர் முனைவர் எட்வின் கிறிஸ்டி அவர்கள் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். ஆங்கிலத்துறை பேராசிரியர் முனைவர் சோ ஜெயலக்ஷ்மி அவர்கள் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவுற்றது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments