திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலை சுற்றி உள்ள உத்திர வீதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வீதி உலாவிற்கு இடையூறாகவும் சாலை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்தும் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் கழிவறைகள் கட்டப்படுவதை எதிர்த்து ஸ்ரீரங்கம் நகர நலசங்கத்தின் சார்பில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்கு W.P(M.D) 22229/2024 தொடரப்பட்டது.
இவ்வழக்கில் ஸ்ரீரங்கம் உத்திர வீதிகளில் கழிப்பறைகள் கட்டுவதற்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை (19.09.2024) இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாகவே மாற்று இடத்தில் கழிப்பறை அமைக்குமாறு ஸ்ரீரங்கம் நகர நலச்சங்கத்தின் சார்பாக மாநகராட்சியிடம் கோரிக்கை மனு உத்திர வீதி குடியிருப்பு வாசிகளின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments