திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், நாகமங்கலம் ஊராட்சி, காந்திநகர் கிராமத்தில் ஆதியன் பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் பூர்வீக தொழில் பூம் பூம் மாடுகளை அழைத்துச் சென்று வீடு வீடாக தானம் பெறுவது.
தற்போது அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
உள்ளுரில் உள்ள அரசுதொடக்கப் பள்ளியில் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பள்ளிப் படிப்பை பல்வேறு சூழ்நிலையின் காரணமாக முழுமையாக முடிக்க இயலாமல் உள்ளனர். அவர்களில் பலர் விளையாட்டிலும், இசையிலும் ஆர்வமாக உள்ளனர்.
மாணாக்கர் அனைவரையும் கல்வியை தொடரச் செய்ய முழுமையான முயற்சியாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் ஆணையின்படியும், திருச்சி முதன்மைக் கல்வி அலுவலரின் ஆலேசனைப்படியும் அவர்களின் விருப்ப படி கல்வி கற்க ஏற்பாடு செய்து வருகிறோம்.
அதில் முதற்படியாக சந்தான ராமன் என்ற மாணவன் தற்போது திருச்சி இசைப் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இசைப்பள்ளி முதல்வர் மாணவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை வழங்க உள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/E0iFlLqoEm278rd7rwHdlh
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments