Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

பெண் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்

‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவ தில்லையாம் அமிழ்ந்து பேரிருளா மறியாமையில்அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை உமிழ்ந்து தள்ளுதல்

பெண்ணற மாகுமாம் உதய கன்ன உரைப்பது கேட்டிரோ” என்ற மகாகவி பாரதியார் அவர்களின் கவிதை வரிக்கு முன்னுதாரணமாக திருச்சி மாநகர காவல்துறையில் முதன்மை மகளிராய் தலைமையேற்று பணியாற்றி கொண்டிருக்கும் மாநகர காவல் ஆணையர் சத்தியப்பிரியா, தலைமையில் இன்று (08.03.23)ந் தேதி திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தில், மாநகரத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் பெண் காவல் அதிகாரிகள் முதல் பெண் காவலர்கள் வரை கலந்து கொண்ட ‘உலக மகளிர் தின விழா” சிறப்பாக நடைபெற்றது.

மகளிர் தின விழாவில் காவல்துறை மற்றும் சமூகத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கு உள்ள தடைகளை களையவும், ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்களது உரிமைகளை நிலைநாட்டவும், பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் பொது இடங்கள் மற்றும் பணிபுரியும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பணிபுரியும் பெண்களுக்கு பாதுகாப்பினை வழங்குவதற்காகவும், ஒரு சமநிலை சமூகத்தை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் சிறப்புரையில், ‘சமூகத்தில் ஆண்களுக்கு இணையாக பணியாற்றும் பெண்களுக்கு வாழ்த்துகளை முதற்கண் தெரிவித்து கொண்டும், தமிழக காவல்துறையில் ஆண்கள் மட்டுமே பணிபுரிந்து வந்த நிலையில், பெண்களும், ஆண்களுக்கு இணையாக காவல்துறையில் பணிபுரிந்து வருவதாகவும், ஓவ்வொரு காவல்நிலையங்களிலும்

வரவேற்பளாராக பெண் காவல் ஆளிநர்கள் நியமிக்கப்பட்டிருப்பது, புகார்களுடன் வரும் நபர்கள் தெரிவிக்கும் பிரச்சனைகளை கனிவோடு கேட்டு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காக காவல்நிலைங்களில் வரவேற்பளாராக பெண் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டிலேயே தமிழக காவல்துறையில் பெண்கள் அதிக அளவில் பணியாற்றி வருவதாகவும், குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண்கள் சிறப்பாக பணியாற்றி இந்தியாவிலேயே தமிழக காவல்துறை முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

மேலும் பெண்களுக்கான வேலை வாய்ப்பில் தமிழகம் முதல் மாநிலமாக உள்ளதாகவும், பல சமூக கட்டமைப்புகையில் பெண்கள் பணிபுரிந்து வருவதாகவும், காவல்துறையில் பணிபுரியும் பெண்கள் அனைவரும் பெண்கள் பாதுகாப்பு குறித்து முழுமையாக தெரிந்து கொண்டு, வேறு பணிகளில் உள்ள தங்கள் உறவினர்கள் மற்றும் தெரிந்த நபர்களுக்கு பாதுகாப்பு குறித்து தெரிவிக்க வேண்டும்.

பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய அரசு நிறுவனங்கள் மூலமாக இலவச உதவி எண்கள் : 1091 மற்றும் 181 மூலமாகவும் மற்றும் காவல் உதவி செயலியை (Kaval Uthavi App) தங்களின் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து தங்களது அன்றாட பாதுகாப்பினை உறுதி செய்துகொள்ளவேண்டும் என உரையாற்றினார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு, தெற்கு சரகம், காவல் பெண் அதிகாரிகள் மற்றும் 200 பெண் காவல் ஆளிநர்கள் கலந்து கொண்டார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *