திருச்சி மலைக்கோட்டை அருகே உள்ள ஜவுளி கடையின் (சாரதாஸ்) உரிமையாளர் ரோஷன்.இவருக்கு mail அனுப்பி ₹5.லட்சம் கேட்டு மிரட்டி உள்ளனர். ரோஷன் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினியிடம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து காவல் ஆணையர் சைபர் க்ரைம் காவல்துறையினரை விசாரிக்க உத்தரவிட்டார். விசாரணையில் தஞ்சாவூரைச் சேர்ந்த பாலசுப்ரமணி, அவரது மனைவி ராதிகா ஆகிய இருவரும் சாரதாஸ் உரிமையாளர் ரோஷனுக்கு ஈ மெயிலில் மிரட்டல் கடிதம் அனுப்பி உள்ளனர்.
அதில் உடை மாற்றுவதை ரகசிய கேமராவில் படம் பிடிப்பதாக கூறி மிரட்டியுள்ளனர் என்பது தெரியவந்தது. அதற்க்கு நீங்க ரூ.5லட்சம் பணம் தரவேண்டும் குறிப்பிட்டுள்ளனர். காவல்துறையினர் பாலசுப்ரமணி, மனைவி ராதிகா இருவரையும் கைது செய்து பின்னர் பிணையில் விடுவித்தனர்.
மேலும் விக்கி என்பவர் தப்பியோடி உள்ளார். திருச்சி மாநகர கோட்டை காவல்நிலைய காவல் அதிகாரிகள் தேடிவருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
Comments