Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர அழைப்பு

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், புள்ளம்பாடியில் உள்ள மகளிர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட்-2023 ஆம் ஆண்டிற்கான இணையவழி சேர்க்கைக்காக விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பத்தினை நேரில் இந்நிலையத்திற்கு வந்து இலவசமாக விண்ணப்பம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் : 07.06.2023.

தொழிற்பிரிவுகள் கீழ்கண்டவாறு ENGINEERING தொழிற்பிரிவுகள் கம்மியர் மின்னணுவியல் (NCVT) (Electronic Mechanic), இயந்திர வேலையாள் (Machinist) (NCVT) ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு தேவையான கல்வித்தகுதி 10 ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பயிற்சி காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

NON ENGINEERING தொழிற்பிரிவுகள் : கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் மற்றும் புரோகிராமிங் அசிஸ்டென்ட் (NCVT)(COPA}, டெஸ்க் டாப் பப்ளிஸிங் ஆப்பரேட்டர்கள் (NCVT) (DTPO), பல்லூடகம் அசைவியல் மற்றும் சிறப்பு விளைவுகள் (Multimedia Animation & Spccial Effccts) (NCVT) , சுருக்கெழுத்து மற்றும் செயலக உதவியாளர் (ஆங்கிலம் (NCVT)(Stenography English) மேற்கண்ட தொழிற்பிரிவுகளுக்கு தேவையான கல்வித்தகுதி 10 ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பயிற்சி காலம் 1ஆண்டு ஆகும்.

சுயதொழில் செய்வதற்கு ஏதுவான தொழிற்பிரிவுகள் ஆடை தயாரித்தல் (NCVT)(Dress Making), அலங்காரப் பூத்தைத்தல் தொழில் நுட்பம் (Surface Ornamentation Techniques) (NCVT) மேற்கண்ட தொழிற்பிரிவுகளுக்கு தேவையான கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தோச்சி மற்றும் பயிற்சி காலம 1 ஆண்டு ஆகும். மேற்கண்ட தொழிற்பிரிவுகளில் பயிலுவதற்கு மகளிருக்கு உச்ச வயது வரம்பு ஏதுமில்லை. இத்தொழிற்பயிற்சி நிலையமானது 3 STAR அந்தஸ்து பெற்ற நிலையமாகும்.

சிறப்பு அம்சங்கள் :1) பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய Internship training வழங்கப்படும் 2) பிரபல தொழில் நிறுவனங்களிலிருந்து வளாக நேர்முகத் தேர்வு (Campus Interview) நடைபெற்று வேலையில் அமர்த்தப்படுவர்..

சலுகைகள் : 1) பயிற்சிக் கட்டணம் இல்லை. 

(2) கல்வி உதவித்தொகை மாதந்தோறும் ரூ.750/-

3) கட்டணமில்லா பேருந்து சலுகை

(4) விலையில்ன் மிதிவண்டி

5) விலையில்லா மடிக்கணினி 

(6) விலையில்லா பாடப்புத்தசங்கள் மற்றும் வரைபடக்கருவிகள்

7) விலையில்லா சீருடைகள் – 2 செட்

(8) தையர்கூலி ரூ300

9) விலையில்லா காலணி ஒரு செட், 

10) பெண் பயிற்சியாளர்களுக்கு வீடுதி வசதியும் உள்ளது

இது தொடர்பாக முதல்வர் அரசினர் தொழியயிற்சி நிலையம் (மகளிர்) புள்ளம்பாடி 94990-55721 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *