திருச்சி மாவட்டம் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பணி மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கு முசிறி கல்வி மாவட்ட அலுவலர் (தொடக்கக் கல்வி) மதியழகன் வருகை தந்தார்.
அவரிடம் டிட்டோ ஜாக் ஆசிரியர் சங்கத்தினர் முசிறி, துறையூர், புள்ளம்பாடி ஆகிய பகுதிகளில் மொத்தம் ஏழு தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்ததாகவும், இதில் முசிறி தாலுகாவில் உள்ள மேல கொட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் காலி பணியிடத்தை
கலந்தாய்வில் காட்டாமல் கலந்தாய்வுக்கு முன்னதாக நிரப்பியது தவறு என கூறி முசிறி கல்வி மாவட்ட தொடக்க கல்வி அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து கலந்தாய்வில் நடைபெற்றுள்ள முறைகேட்டை தமிழ்நாடு முதலமைச்சர் விசாரணை செய்து நியாயமான முறையில் கலந்தாய்வு நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் சங்கத்தின் நிர்வாகிகள் என வலியுறுத்தினர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments