திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா தென்னூர் உழவர் சந்தையில் துரை வைகோ தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திருச்சி நாடாளுமன்ற அலுவலகத்தை திறந்து வைத்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மாமன்ற உறுப்பினர் மதிவாணன் மற்றும் மதிமுகவின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ….. திருச்சியில் தலைமை அலுவலகம் திறக்கப்பட்டுள்ள நிலையிலும் புதுக்கோட்டையில் பொதுமக்களின் மனுக்கள் வாங்குவதற்கான அலுவலகம் திறக்கப்படும். புதுக்கோட்டை மாநகராட்சி நிர்வாகம் அதற்கான இடம் ஒதுக்கீடு செய்தவுடன் அலுவலகம் திறக்கப்படும்.
நேற்று மத்திய இணை அமைச்சர் ஷோபா தீவிரவாதிகளுக்கு பயிற்சி வழங்கும் இடமாக தமிழக உள்ளதாக தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு?…. இதே அம்மையார் தான் கர்நாடகாவில் நடந்த குண்டு வெடிப்புக்கு தமிழ்நாடு தான் காரணம் அங்கு தான் தீவிரவாதிகளை உருவாகிறார்கள், பயிற்சி கொடுக்கிறார்கள் என தமிழ்நாட்டு மக்களை அவமானம் படுத்தும் விதமாக பேசியிருந்தார்.
அதன் பின்னர் ஊடகங்களில் கண்டனம் தெரிவித்தற்கு பின்னர் என்ன நிர்பந்தம் காரணமோ மன்னிப்பு கேட்டார். மறுபடியும் இது போல் பேசி உள்ளார். இதுபோல பிரிவினைவாத சக்தியெல்லாம் தூண்டும் இந்த இயக்கங்கள் தான் இது போன்றவற்றை வரவேற்கும். என்ன தைரியம் என்றால் தமிழ்நாட்டில் மத்திய பகுதியான திருச்சியில் அந்தக் கட்சியில பேனர் வைக்கின்றனர். இது மிகவும் சங்கடமானது. இனஉணர்வு எங்கே போச்சு என இருக்கிறது.
தமிழ்நாடு பொறுத்த வரை இது திராவிட மண், மதவாத சக்திகளுக்கு இடம் கிடையாது. எந்த கூட்டணி வைத்தாலும் தமிழ்நாட்டில் ஒருபோதும் மதவாத சக்திகளுக்கு மக்கள் இடம் அளிக்க மாட்டார்கள் என தெரிவித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments