தென் கைலாயம் என போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை மட்டவார் குலம்மை உடனுறை தாயுமானசாமி கோயிலுக்குச் சென்று மனம் உருகி சிவனை வழிபட்டால் சுகப்பிரசவத்தில் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் உத்தரத்திற்கு முந்தைய நாளில் கோவில் தெப்பக்குளத்தில் தெப்பத் திருவிழா சிறப்பாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி மாத தெப்ப திருவிழா கடந்த (15.03.2024) அன்று கொடி ஏற்றம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் சுவாமி, அம்பாள் தினந்தோறும் வெவ்வேறு வாகன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்கள். 16ம் தேதி சுவாமி கற்பக விருச்சக வாகனத்திலும், அம்பாள் காம தேனு வாகனத்திலும், வீதியுலா வந்தனர். 17ஆம் தேதி சுவாமி பூத வாகனம், அம்பாள் கமலம் வாகனம், 18ஆம் தேதி சுவாமி கைலாச பர்வதம், அம்பாள் அன்ன வாகனம்,
19ஆம் தேதி சுவாமி – அம்பாள் வெள்ளி ரிஷபம் வாகனம், 20ஆம் தேதி சுவாமி யானை வாகனம், அம்பாள் கண்ணாடி பல்லாக்கு, 21ஆம் தேதி சுவாமி நந்திகேஸ்வரர் வாகனம், அம்பாள் சிம்ம வாகனம், 22ஆம் தேதி சுவாமி தங்க குதிரை வாகனம், அம்பாள் கண்ணாடி பல்லாக்கு ஆகிய ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் புறப்பாடு செய்யப்பட்டு வீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த நிலையில், வரும் சுவாமி வெள்ளி ரிஷபம் வாகனம் மரத்தினால் செய்யப்பட்டு அதன் மேல் வெள்ளி கவசம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வெள்ளி ரிஷபம் வாகனம் மிகவும் மோசமாக சிதிலம் அடைந்துள்ளது. வெள்ளி கவசத்திற்குள் இருக்கும் மரங்கள் உடைந்து காணப்படுகிறது மேலும் இந்த ரிஷப வாகனத்தில் கால்கள் தற்காலிகமாக தகரத்தைக் கொண்டு பொருத்தி வைத்துள்ளனர். இதைப்பற்றி ஏன் மலைக்கோட்டை கோவில் நிர்வாகம் கண்டுக்கொள்ளாமல் இருப்பது ஏன்?
உலகை காக்கும் ஈசனுக்கே இந்த நிலைமையா என பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 23ஆம் தேதி மாலை ஆறு முப்பது மணிக்கு மேல் தெப்ப திருவிழா நடைபெற உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments