Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

இன்பத்தில் திளைக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள் – சரித்திரம் படைக்க தயாராக சந்திராயன்!!

நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்தியா ஏற்கனவே சந்திரயான் 2-ஐ கடந்த 2019ல் அனுப்பியிருந்தது. அப்போது லேண்டர் வேகமாக நிலவின் மேற்பகுதியில் மோதியதால் தகவல் தொடர்பு கிடைக்காமல், திட்டம் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில்தான் தற்போது சந்திரயான் 3ஐ இந்தியா செலுத்தியுள்ளது. லேண்டர் இன்று நிலவில் இறங்க இருக்கிறது. இதற்கிடையே சந்திரயான்2 ஆர்பிட்டர் நிலவை சுற்றிக் கொண்டிருக்கிறது.

இந்த ஆர்பிட்டர் சந்திரயான் 3 லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. இரண்டும் தங்களுக்கிடையே தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதனால் லேண்டர் நிலவின் மேற்பகுதியை அடைய, இஸ்ரோவுக்கு கூடுதலா ஒரு வழி கிடைத்துள்ளது.விக்ரம் லேண்டர் சாதனம் வெற்றிகரமாக தரையிறங்கினால், இந்தப் பட்டியலில் நான்காவது நாடாக இந்தியா இடம்பெறும். மேலும், நிலவில் இதுவரை ஆய்வு மேற்கொள்ளப்படாத, அதன் தென் துருவத்தை ஆய்வு செய்யும் முதல் நாடு என்ற பெருமையும் நம் நாட்டுக்கு கிடைக்கும். ரஷ்யா சமீபத்தில் அனுப்பிய ‘லுானா – 25 விண்கலத்தில் இருந்த லேண்டர் சாதனம். கட்டுப்பாட்டை இழந்து, நிலவில் மோதியது. இதனால், ரஷ்யாவின் நிலவை ஆய்வு செய்யும் திட்டம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சந்திரயான் 3 திட்டத்தின் செயல்பாடுகளை உலக நாடுகள் உன்னிப்புடன் கவனிக்கின்றன.

விக்ரம் என பெயரிடப்பட்டுள்ள லேண்டர், நிலவில் தரை இறங்கியவுடன் அதன் உள்ளே இருந்து, பிரக்யான் என பெயரிடப்பட்டுள்ள, ‘ரோவர்’ வாகனம் சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்ளும், வெளியே வந்து, நிலவின் மேற்பரப்பில் லேண்டர் சாதனம் மற்றும் ரோவர் வாகனம், நிலவில் மேற்பரப்பில் கால்பதிக்கு அதாவது, நம் பூமியின், 14நாட்கள் அங்கு ஆய்வுகளை மேற்கொள்ளும். இதற்காக, இரண்டிலும் பிரத்யேக ஆய்வு சாதனங்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவை நிலவின மேற்பரப்பிலும் நிலவின் மேற்பரப்பில் இருந்து உள்ளே சென்றும் ஆய்வுகளை மேற்கொள்ளும். இதுவரை, அமெரிக்கா, சீனா மற்றும் முந்தைய சோவியத் யூனியன் ஆகியவை மட்டுமே, நிலவின் மேற்பரப்பில் ஆய்வுகளை செய்துள்ளன.

இந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டாலும், இந்த அனுபவத்தின் அடிப்படையில், நிலலில் மெதுவாக தரையிறங்கும் வகையில், ஒவ்வொரு நொடிக்கும் திட்டமிட்டு, 550 கோடி ரூபாய் செலவில், சந்திரயான் 3 விண்கலம் உருவாக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான 3 விண்கலம், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து கடந்த மாதம் 14ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதன் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

சந்திரயான் 3 விண்கலத்தில் உள்ள, ‘புரபல்ஷன் மாட்யூல்’ எனப்படும் உந்து கலத்தில் இருந்து. நிலவில் தரையிறங்க உள்ள, ‘லேண்டர்’ சாதனம் கடந்த 17ம் தேதி பிரிந்து சென்றது. இது, நிலவில் இன்று மாலை சரியாக 6.04 மணிக்கு தரை இறங்க உள்ளது. இதன் நேரலை ஒளிபரப்பு மாலை 5.20 மணி முதல் வழங்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. நம்நாட்டின் பெயரை உலகிற்கு பறைசாற்ற இருக்கும் விஞ்ஞானிகளுக்கு திருச்சி விஷன் சார்பாக அட்வான்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்!

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *