இந்திய நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவெறும்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட பனையக்குறிச்சி ஊராட்சியில் நேற்று சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடந்தது. திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமை வகித்து கூட்டத்தைத் துவக்கி வைத்தார். பின்னர் மாற்றுதிறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள், கலைஞரின் கனவு இல்ல கட்டுவதற்கான அனுமதி, மகளிர் சுய உதவிக் குழுவுக்கு சமுதாய முதலீட்டு நிதி உதவி, வீட்டு மனை பட்டா, தோட்டக்கலை துறை சார்பில் மாடித்தோட்ட ஹிட்டுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனை மாவட்ட ஆட்சியர் பேசுகையில்….. தமிழ்நாடு முதல்வர் அதிக அளவு பெண்களின் சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். புதுமைப்பெண் திட்டம் மகளிர் உரிமை தொகை திட்டம் தற்போது மாணவர்களும் பயன்பெறும் வகையில் தமிழ் புதல்வன் திட்டத்தை செயல்படுத்துகிறார்.
பள்ளிகளில் காலை உணவு திட்டம் மாணவர்களின் கல்வி அறிவு அதிகரிப்பதோடு ஆரோக்கியமும் பெறுகின்றனர். மேலும் 100 நாள் வேலைக்கு செல்லும் பெண்கள் காலதாமதம் இல்லாமல் குறித்த நேரத்திற்கு பணி சுமை இல்லாமல் இதனால் சென்று வருகின்றனர். தமிழக அளவில் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி கடந்த 12ஆம் தேதி பெரிய அளவில் எடுக்கப்பட்டது. மாணவர்கள், சுய உதவி குழுக்கள், தனியார் அமைப்புகள் எடுத்துக் கொண்டனர்.
போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஒரு குடும்பம் மட்டுமல்லாது, அந்த சமுதாயத்தையே பாதிக்கும். இந்த கிராமத்தில் போதைப் பொருள்கள் பயன்படுத்த கூடாது என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம். பெண்களிடம் கூறுவது தான் நேரிடையாக சில குடும்பத்தில் சென்று சேரும் இங்கு உள்ள பெண்கள் இதனை தனது குடும்பத்திலும், தனது சுற்றத்தாருக்கு எடுத்து கூறி போதைப் பொருளிலிருந்து விடுபட வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நரசிம்மன், ஸ்ரீதர், வாழ்வாதார இயக்க ஒருங்கிணைப்பாளர் செல்லம்மாள், வேளாண்மை துணை இயக்குனர்கள் சரவணன், பிரபாகரன், வேளாண்மை அலுவலர் நாகேஸ்வரி, வட்டார அலுவலர் சுகன்யாதேவி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் சாயிராபானு, மேற்பார்வையாளர் தமிழரசி, வட்டார கல்வி அலுவலர் ரெஜிபெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Comments