Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அதிகம் பாதிக்கப்படும் துறையாக உள்ளது – திருச்சியில் அமைச்சர் சிவசங்கர் பேச்சு

திருச்சி மலைக்கோட்டை அருகே உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் – தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தில் ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வு கால பணப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அரசு போக்குவரத்து துறை கும்பக்கோனம் கோட்டத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள், மேலும் போக்குவரத்து துறையில் பணியாற்றி இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணப்பலன்கள் வழங்கல் என மொத்தம் 669 பயனாளிகளுக்கு 196.47 கோடி மதிப்பீட்டில் பனப்பலன்களை அமைச்சர் பெருமக்கள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்…… போக்குவரத்து துறைக்கு பிதா மகன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தான். அவர் தான் இந்த துறைக்கு அடித்தளம். தமிழகத்தில் போக்குவரத்து துறையில் 1 லட்சத்து 45 ஆயிரம் பேர் அரசு பணியாளர்களாக உள்ளனர்.

இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கை உள்ள போக்குவரத்து கழகமாக நம் தமிழக போக்குவரத்து கழகம் உள்ளது. போக்குவரத்து துறை அமைச்சராக கே.என்.நேரு இருந்தபோது ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு புதிய கோரிக்கையை முன் வைத்து அதனை சிறப்பாக செயல்படுத்தி இந்த துறைக்கு பல்வேறு சிறப்புகளை செய்தார்.

21 ஆயிரம் பேருந்துகள் தமிழகத்தில் இயக்கப்படுகிறது. போக்குவரத்து துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஏதேனும் குடும்ப பிரச்சனை இருக்கலாம்,ஏதோ ஒரு இடத்தில் கோபம் அடைந்து எதாவது செய்து செய்துவிட்டால் ஊடகங்களில் அந்த நாள் முழுவதும் அது சிறப்பு செய்தியாக மாறி விடுகிறது. எனவே ஊடக நண்பர்கள் இதனை கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

அமைச்சர் நாங்கலெல்லாம் ஏசியில் செல்கிறோம். ஆனால் டிரைவர், கண்டக்டர்கள் அப்படி அல்ல. மிக மிக கடினமாக சூழல்களை கடந்து அவர்கள் பணி செய்கிறார்கள். அரசு துறைகளில் அதிகம் உடல் நலன் பாதிக்கப்படும் துறையாக போக்குவரத்து துறை தான் உள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *