திருச்சி தென்னூர் அண்ணாநகரில், கண்ணதாசன் சாலையில் உள்ள மணப்பாறையை சேர்ந்த சாமிநாதன் என்பவரது வீட்டில் இரண்டு கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இவர் திமுக அமைச்சர் எ.வ.வேலுவுடன் தொடர்புடையவர் என்பதால் இச்சோதனை நடந்துவருவதாக தெரிகிறது.
மேலும் விசாரணைக்காக சாமிநாதன் மற்றும் அவரது மனைவியை அதிகாரிகள் தங்களது காரில் அழைத்துச் சென்றுள்ளனர். மணப்பாறை சாமிநாதன் என்பவர் பிரபல பைனான்சியராகவுவும், லட்சுமி காபித்தூள் ஏஜென்சியின் உரிமையாளராகவும், ரியல்எஸ்டேட் தொழில் நடத்துபவராகவும் உள்ளார். இவரது வங்கி கணக்கு லாக்கரை சோதனை செய்யும் பணியில் வருமான வரித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments