திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா, திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், திருச்சி மாநகரில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் உடல்நலனை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
ஏர்போர்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மொராய்ஸ்சிட்டி ஆடிட்டோரியத்தில், திருச்சி காவேரி பல்நோக்கு மருத்துவமனை சார்பில் திருச்சி மாநகரத்தில் பணியாற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் இதயத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை திருச்சியில் தலைசிறந்த இதயநோய் சிறப்பு மருத்துவர்கள் மூலம் திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்திய பிரியா, தொடங்கி வைத்தார்.
மேற்கண்ட நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் ஆணையர்கள் (தெற்கு, வடக்கு), உதவி ஆணையர்கள், காவல் ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் என சுமார் 400 பேர் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் திருச்சி காவேரி பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை சார்பில் தலைமை இதயநோய் மருத்துவ நிபுணர் மற்றும் இதயநோய் ஆலோசகர் Dr.அரவிந்தகுமார்,MD.DNB.FESC., FACC, மற்றும் Dr.ஆண்ட்ரூஸ்தாஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் பேசுகையில், திருச்சி மாநகரில் பணியாற்றும் காவல்துறையினர் யாரும் இதயநோயால் பாதிக்கப்படாமல் தங்களை பாதுகாத்து கொள்ளவேண்டும், இதயத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து விழிப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும், முறையான உடற்பயிற்சியை தொடர்ந்து செய்ய வேண்டும், மருத்துவர்களின் ஆலோசனைபடி உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும், இதயநோயை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை தடுப்பு மாத்திரையை எப்போதும் தங்கள்வசம் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் Dr.அரவிந்தகுமார் பேசுகையில்…… நல்ல ஆரோக்கியத்துடன் வாழ இதயத்தை பாதுகாக்க சரியான உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும், தினந்தோறும் நடைபயிற்சி மேற்கொண்டும், ஆண்டுக்கு ஒருமுறை இதயம் தொடர்பான மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவேண்டும் எனவும், மாரடைப்பு ஏற்படும்போது உட்கொள்ள வேண்டிய உயிர்காக்கும் அவசர மாத்திரைகளை எப்போதும் தங்கள் வசம் கால் வைத்திருக்க வேண்டும் அறிவுரைகள் வழங்கினார். மேலும் இந்த மாத்திரைகளை காவல்துறையினருக்கு காவேரி மருத்துவமனை மூலம் வழங்குகிறோம் என தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கூறுகையில், இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்த மாநகர காவல் ஆணையருக்கு தங்களது மனமார்த்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள். மேலும், காவலர்கள் நலன்பேனும் வகையில் திருச்சி மாநகரத்தில் இதுபோன்று விழிப்பணர்வு நிகழ்ச்சிகள் நடத்த நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
13 Jun, 2025
383
18 June, 2023










Comments