திருச்சி மாவட்டம் மணப்பாறை செவலூர் காராளான் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் கொடியசைத்து துவக்கி வைத்தார் . 700 காளைகள், 250 காளையர்கள் களம் காணுகின்றனர்.
மணப்பாறை செவலூர் வீரக்கோவில் ஆலய திடலில் காராளான் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு தற்போது நடைபெற்றது. இதில் மணப்பாறை சுற்றுவட்டார பகுதி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து வந்துள்ள 700-க்கு மேற்பட்ட காளைகளும், 250-க்கு மேற்பட்ட காளையர்களும் களம் காணுகின்றனர்.

ஆலயத்தில் ஊர் காளைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின் வாடிவாசலில் அவிழ்க்கப்பட்டதையடுத்து, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டத்திலிருந்து வந்துள்ள காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியே அவிழ்க்கப்பட்டு வருகிறது. 50, 50 தொகுப்பாக காளையர்கள் களத்தில் உள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

13 Jun, 2025
388
12 May, 2023










Comments