Site Logo mobile
Search Icon
Mobile Gif
Jobs

திருச்சி மாவட்ட சுகாதாரத்துறையில் வேலை வாய்ப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதாரத்துறையில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கான வேலை வாய்ப்புகளை மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர் அறிவித்துள்ளார். இந்தப்பணிகள் முற்றிலும் தற்காலிகமாக 11 மாதங்கள் ஒப்பந்தத்திற்கான பணியிடங்களாகும். இப்பணியிடங்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நிரப்பப்படவுள்ளன.

நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர்-1 (Special Educator for Behavioral Therapy Bachelor’s / Master’s Degree in Special Education in Intellectual Disability from a UCG recognized University) ஒப்பந்த பணியிடத்திற்கான மாத ஊதியம் ரூ.23,000-தொழில்சார் சிகிச்சையாளர் -1 (Occupational Therapist Bachelor’s / Master’s Degree in Occupational Therapy from a recognized University) பணியிடத்திற்கான மாத ஊதியம் ரூ.23.000-மற்றும்

சமூக சேவகர் 1 (Social Worker – Master of Social Work (MSW)) பணியிடத்திற்கான மாத ஊதியம் ரூ.23,800- இப்பணியிடங்களுக்கான அதிகபட்ச வயது 40 வயதுக்குள் இருக்கவேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் https://tiruchirappalli.nic.in/notice category/recruitment/ என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் முதல்வர், அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி-620 001 என்ற முகவரிக்கு (31.01.2025)-க்குள் நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமோ அனுப்பவேண்டும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *