Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மத்திய சிறையில் வேலை வாய்ப்புகள்- மாவட்ட ஆட்சியர் தகவல்

 தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையின் கீழ் இயங்கும் திருச்சி மத்திய சிறையில் காலியாக உள்ள தூய்மை பணியாளர் இரண்டு பணியிடத்திற்கு எழுத படிக்க தெரிந்தவர்கள் 1.7 2022 அன்று 18  வயதிற்கு மேற்பட்டு எஸ் சி/ ஏ எஸ் சி /எஸ் டி 37 வயதிற்கு உட்பட்டவர்கள் எம்பிசி/பி சி 34 வயதிற்கு உட்பட்டவர்கள் ஓசி 32 வயதிற்கு உட்பட்டவர்கள் எஸ்சிஏஜிஎல் பிரியாரிட்டி ஒரு நபர் GTGL priority  ஒரு நபர் தேர்வு செய்து நியமனம் செய்யப்பட உள்ளது.

தூய்மை பணியாளர் பதவி ஊதிய விகிதம்( 15,700 முதல் 50,000 )ரூபாய் 15 700 ஆகும் மேற்படி தூய்மை பணியாளர் பதவிக்குரிய தகுதி பெற்றவர்கள் சுய விவரங்கள் வருகின்ற 28.10.2022க்குள் திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளருக்கு கிடைக்கப்பெறும் வகையில் அனுப்பி விட தெரிவிக்கப்படுகிறது.

அதேபோன்று சோசியல் கேஸ் ஒர்க்கர் சமூக இயல் நிபுணர் பணிக்கு கீழ்க்கண்ட கல்வி தகுதி பட்டப்படிப்பு முடித்தவர்கள் 1/7 2022 அன்று 13 வயதிற்கு மேற்பட்டு எஸ்சிஎஸ்சி 37 வயதுக்குட்பட்டவர்கள் எம் பி சி பி சி 34 வயதிற்கு உட்பட்டவர்கள் ஓசி 32 வயதிற்கு உட்பட்டவர்கள் பொது பிரிவில் தெரிவு செய்து 15,000 மாதாந்திர தொகுப்பு ஊதியத்தில் நியமிக்கப்பட உள்ளனர். முதல்நிலை பட்டப்படிப்பு சமூக பணி அல்லது சமூக சேவை அல்லது சமூக அறிவியல் அல்லது குற்றவியல் அல்லது சமூகவியல்

இளநிலை பட்டப்படிப்பு: சமூக பணி, சமூக சேவை ,சமூக அறிவியல், குற்றவியல், சமூகவியல்,பிற ஏதாவது ஒரு பட்டப் படிப்புடன் சமூக பணிக்கான  பட்டைய படிப்பு அல்லது சமூக சேவை அல்லது சமூக அறிவியல் அல்லது குற்றவியல் அல்லது சமூகவியல் மேற்படி சமூக இயல் நிபுணர் பதவிக்குரிய தகுதி பெற்றவர்கள் 28.102022-ம் தேதிக்கு திருச்சி மத்திய சிறை  கண்காணிப்பாளருக்கு கிடைக்கப்பெறும் வகையில் தங்களுடைய சுய விவரங்களை அனுப்பி விட தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…  https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *