Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மாவட்ட சுகாதாரத்துறையில் வேலை வாய்ப்புகள்.

திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதாரத்துறையில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கான வேலை வாய்ப்புகள். இந்தப்பணிகள் முற்றிலும் தற்காலிகமாக 11 மாதங்கள் ஒப்பந்தத்திற்கான பணியிடங்களாகும். இப்பணியிடங்கள் கீழ்கண்டவாறு நிரப்பப்படுகின்றன.

மாவட்ட சுகாதார அலுவலகம், திருச்சிராப்பள்ளி 

பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) (2 வருட பல்நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) சுகாதார ஆய்வாளர்-துப்புரவு ஆய்வாளர் படிப்பு மாத ஊதியம் ரூ.14000- Programme Cum Administrative Assistant (இளங்களை மற்றும் முதுகலை கணிE அறிவியல் பயன்பாடு படிப்பு மற்றும் தமிழ், ஆங்கிலம் தட்டச்சு படிப்பு) மாத ஊதியம் 12000- 

முதல்வர், அரசு மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனை, திருச்சி:

மருத்துவமனை தரவு மேலாளர் (Hospital Quality Manager) (Dental / AYUSH Paramedical Degree with Master in Hospital Administration / Health Management / Public Health and minimum of 2 years experience) மாத ஊதியம் ரூ.60000- ஆய்வக நுட்புநர் (DMLT தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்) மாத ஊதியம் ரூ.13000, இயன்முறை வல்லுநர் (முழு நேர 4 வருட Bachelor in Physiotherapy படிப்பு) மாத ஊதியம் ரூ.13000-.

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (8-ம் வகுப்புக்குள் பயின்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்) மாத ஊதியம் ரூ.8500-. பாதுகாவலர் (8-ம் வகுப்புக்குள் பயின்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்கவேண்டும்) மாத ஊதியம் ரூ.8500- துப்புரவு உதவியாளர் (8-ம் வகுப்புக்குள் பயின்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்) மாத ஊதியம் 8500-

இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள், திருச்சி:

அறுவை சிகிச்சை அரங்கு உதவியாளர் (OT Assistant) (12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் OT Assistant course பயிற்சி முடித்திருக்க வேண்டும்) மாத ஊதியம் ரூ.11200- பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் (8-ம் வகுப்புக்குள் பயின்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்கவேண்டும்) மாத ஊதியம் ரூ.8500-

துணை இயக்குநர் (காசநோய்) மாவட்ட காசநோய் மையம், அரசு தலைமை மருத்துவமனை வளாகம், திருச்சி:

மருத்துவ அலுவலர் (காசநோய்) (இளங்கலை மருத்துவர் படிப்பு (MBBS) முடித்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்கவேண்டும்) மாத ஊதியம் ரூ.60000 முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் (Senior Tuberculosis Laboratory Supervisor (TB) (ஆய்வக நுட்புநர் படிப்பில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களிலிருந்து பெறப்பட்ட பட்டம் அல்லது பட்டய கல்வி தகுதி மற்றும் குறைந்தபட்ச இரண்டு மாத காலத்திற்கான கணிணி பயன்பாடு பயிற்சி மற்றும் இரண்டு சக்கர வாகனம் இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமம் பெற்று இயக்க தெரிந்திருக்கவேண்டும்) மாதம் ஊதியம் ரூ.19800-. சுகாதார பார்வையாளர் (Health Visitor-TB) (அறிவியல் பாடத்திட்ட 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கணிணி இயக்குநர் பயிற்சி மற்றும் தொடர்புடைய அனுபவ சான்றிதழ்) மாத ஊதியம் ரூ. 13300- ஆய்வக நுட்புநர் (காசநோய்) (DMLT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்) மாத ஊதியம் ரூ.13000-

இப்பணியிடங்களுக்கான அதிகபட்ச வயது 59-க்குள் இருக்கவேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் https://tiruchirappalli.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மேற்கண்ட முகவரிக்கு (13.12.2024) மாலை 5:00 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமோ அனுப்பவேண்டும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *