Monday, September 22, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஜூலை 14சிறப்பு தடுப்பூசி முகாம்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சுற்றுலா தொழிலில் ஈடுபட்டுள்ள விடுதி நிர்வாகிகள், பணியாளர்கள், பயண முகவர்கள், சுற்றுலா வழிகாட்டி,டாக்ஸி  மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோர் பயனடையும் வகையில் மாவட்ட நிர்வாகம் சுகாதார துறை மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து திருச்சிராப்பள்ளி ஹோட்டல் தமிழ்நாடு வளாக. கூட்டரங்கத்தில்  கோவிட்-19 தடுப்பூசி சிறப்பு முகாம் வருகிற 14-ஆம் தேதி புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது.

புதன்கிழமை காலை 9 மணி அளவில் திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு வளாக கூட்டரங்கத்தில் தொடங்கும் இந்த சிறப்பு முகாமில் தங்களது ஆதார் கார்டு, பணிபுரிவதற்கான அடையாள அட்டை, அலைபேசி எண் ஆகியவற்றுடன் வருகைதந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த சிறப்பு தடுப்பூசி முகாமில் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொடர்புள்ள 300 நபர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *