ஜூன் 12 குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு நலன் சார்த்த சட்டங்கள் குறித்து திருச்சி சரக காவல்துறை பணியிடை பயிற்சி மையத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் சுதர்சன் தலைமையில் 11.06.25 நடைபெற்றது.
மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு இளஞ்சிறார் நீதி சட்டம் 2015 பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் 1986 வளரிளம் பருவ தொழிலாளர் திருத்தச் சட்டம் 2016 கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் 1976 ஆகிய சட்டங்களின் முக்கிய
பிரிவுகள் குழந்தை நலக்குழு இளஞ்சிறார் நீதிக் குழுமம் மற்றும் குழந்தைகள் உதவி மையம் செயல்பாடுகள் பணிகள் நடைமுறைகள் குறித்தும் ஆண்டிற்கு ஆறு முறை நடக்கும் கிராம சபைக் கூட்டங்களானஜனவரி 26 மார்ச் 22 மே 01 ஆகஸ்ட் 15 அக்டோபர் 02 நவம்பர் 01 ஆகிய நாட்களிலும் கிராம வட்டார மாவட்ட பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி மண்டல வார்டு அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்கள
காலாண்டிற்கு ஒரு முறையும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் மாதம் தோறும் நடக்கும் நாளில் காவலர்களின் பங்கேற்பு குறித்தும் குழுக்களில் உள்ள உறுப்பினர்களின் விவரம் இலவச தொலைபேசி எண்களான குழந்தை உதவி மையம் 1098பெண்கள் உதவிமையம் 181 மூத்தகுடி மக்கள் உதவிமையம் 14567 பள்ளி மாணவர்களுக்கான உதவி மையம் 14417 இணைய வழி குற்றம் 1930 போதை சிகிச்சை மீட்பு மறுவாழ்வு மற்றும் மனநலம் சார்ந்து
14416 கொத்தடிமை தொழிலாளர் குறித்து புகார் எண் 155214 மற்றும் கொத்தடிமை தொழிலாளர் முறை கண்காணிப்பு குழுக்கள் பணிகள் குறித்து பயிற்சி அளித்தார். பயிற்சியில் 40 க்கும் மேற்பட்ட திருச்சி மற்றும் மாநகரம், கரூர் பெரம்பலூர் புதுக்கோட்டை அரியலூர் மற்றும் இரயில்வே காவல் ஆளிநர்கள் கலந்துக் கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments