கடந்த (12.08.24)-ந் தேதி, கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் காவல்நிலைய எல்லையில் திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த இளஞ்சிறார் ஒருவர் வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டு முதன்மை நடுவர், இளைஞர் நீதிக்குழுமம், கோயம்புத்தூர் மாவட்டம் முன்னிலையில் ஆஜர்படுத்தபட்டுள்ளார்.
அந்த இளஞ்சிறாரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மேற்படி இளஞ்சிறாருக்கு 15 நாட்கள் (13.08.24 முதல் 27.08.24 வரை) தினமும் 8 மணிநேரம் திருச்சி மாநகர போக்குவரத்து காவல்துறைக்கு உதவிபுரிய வேண்டுமென்று முதன்மை நடுவர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி மேற்படி இளஞ்சிறாரை திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, முன்பு ஆஜர்படுத்தப்பட்டது.
அவருக்கு தக்க அறிவுரையை வழங்கியும் இனிமேல் எந்த ஒரு குற்ற செயல்களிலும் ஈடுபட கூடாது என எச்சரித்தும், இன்று (13.08.24) முதல் 15 நாட்களுக்கு, தினமும் 8 மணிநேரம் திருச்சி மாநகர ஸ்ரீரங்கம் போக்குவரத்து ஒழுங்குபிரிவில் போக்குவரத்தினை சீர்செய்திட உதவிபுரியுமாறு அறிவுரை வழங்கபட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments