Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் வெள்ளி விழா கொண்டாட்டம்

கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியின் வெள்ளி விழா மற்றும் 21வது அரங்கேற்ற விழா சனிக்கிழமை நடைப்பெற்றது. 

இந்நிகழ்வில் கல்லூரியின் செயலர் S.G.சாமிநாதன் அடிகள் தலைமையில் முதல்வர் முனைவர் ப.நடராஜன் முன்னிலை வகித்தார்.

நிகழ்வில் சிறப்பு விருந்தினர் டாக்டர் ஜெ. ஜெயலலிதா, அரசு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக தேர்வு நெறியாளார் முனைவர் சக்திவேல், மற்றும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக நிகழ்கலைத்துறை புலத்தலைவர் முனைவர் பிரேமலதா ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய முனைவர் பிரேமலதா, தனது உரையில்..

 “தென்னிந்தியாவில் நுண்கலைப் படிப்புகளை கல்விப் புலங்களுக்கு வந்து கற்போர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அந்த நிலை அதிகரிக்கப்பட வேண்டும். இளைய தலைமுறை நுண்கலைகளைக் கற்றிட ஆர்வம் காட்டவேண்டும். இந்தத் துறையில் தேசிய கல்வித்தகுதித்தேர்வான நெட் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் எண்ணிக்கை மிக குறைவாகவே உள்ளது. 

அந்த நிலையை களைவதற்கு பல்கலைக்கழகம் வாயிலாக இணையவழியில் இலவச பயற்சி வழங்கப்படும். மாணவர்கள் பயன்படுத்திட முன்வரவேண்டும்” என்றார்.

அரங்கேற்றம் செய்த மாணவர்களையும் முதல் தலைமுறை கலைஞர்களாக ஆக்கிய ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் பெரிதும் பாராட்டுவதாகவும் கூறினார் . 

அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் முனைவர் சக்திவேல் பேசுகையில்,

“நுண்கலைப் படிப்பில் சேர்ந்து படிப்போர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்திட வேலைவாய்ப்பு மையத்தை கல்வி வளாகத்திலேயே உருவாக்கிட நெட் தேர்விற்கு பயிற்சியளிக்க உடனடியாக ஏற்பாடு செய்வேன்” என்றார்.

மேலும், “பரதம், இசை சார்ந்த படிப்புகளில் முனைவர் பட்டம் மேற்கொள்ள பிற துறைசார்ந்த ஆய்வாளர்களுக்கும் வாய்ப்பும் முன்னுரிமையும் வழங்கிட நெறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியை பல்கலைக்கழகமாக ஆக்குவதற்கான அனைத்து உள்கட்டமைப்பு வசதியும் தகுதியும் உள்ளது என்றார். நுண்கலைகளைப் பயிற்றுவித்து தமிழர் கலைகளை உலகெங்கும் பரப்பிடும் தகுதிமிக்க ஆசிரியர்களையும் திறன்மிகு மாணவர்களையும் மனமார வாழ்த்துகிறேன்” என்றார்.

நிகழ்வில் ஆண்டறிக்கை வெளியிடப்பட்டது.

அருள்தந்தை முனைவர் ஜோசப் ஜெயசீலன் எழுதிய இந்துஸ்தானி இசை தென்னிந்திய இசை குறித்த ஒப்பாய்வு ஆங்கில நூலினை தேர்வு நெறியாளர் வெளியிட்டார். முதல்படியை முனைவர் பிரேமலதா பெற்றுக்கொண்டார். நூல் குறித்த அறிமுக உரையை நூலாசிரியர் முனைவர் ஜோசப் ஜெயசீலன் ஆற்றினார். மூன்றாமாண்டு இசை, நடன மாணவர்களின் அரங்கேற்ற கலைநிகழ்வுகள் நடைபெற்றது.

கல்லூரி வளர்ச்சிக்கும் கொரோனா பெருந்தொற்றுக்காலத்தில் சிறப்பாக களப்பணியாற்றிய பேராசிரியர்களுக்கு பாராட்டும் சான்றிதழும் வழங்கப்பட்டது. ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் பியூலா எஸ்தர், தமிழ்த் துறை உதவிப்பேராசிரியர் கி.சதீஷ் குமார், நடனத்துறை, உதவிப் பேராசிரியர்கள் . F.பிரேம்குமார்,முனைவர் அ .அபர்ணா பிரீத்தா ஆகியோர்கள் கல்லூரிச் செயலரிடம் பாராட்டுச்சான்றிதழ் பெற்றனர்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *