Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கம்பரசம்பேட்டை தொடக்கப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கம் வட்டம் கம்பரசம்பேட்டை காலனி தொடக்கப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு கம்பரசம்பேட்டை காலனி பள்ளி மற்றும் பள்ளி மேலாண்மை குழு இல்லம் தேடி கல்வி குழு இணைந்து பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா அந்தநல்லூர் வட்டார கல்வி அலுவலர் மருதநாயகம் தலைமையில் நடைபெற்றது.

சீரும் சிறப்புமாக நடைபெற்றது இவ்விழாவில் வரவேற்புரையாற்றிய பள்ளி தலைமை ஆசிரியர் சுகுமார் ராமகிருஷ்ணன் வந்திருந்த அனைவரையும் வரவேற்று பேசினார். மேலும் பெருந்தலைவர் காமராஜரை பற்றியும் அவர் ஆற்றிய தொண்டுகளை பற்றி மாணவர்களிடம் எடுத்துரைத்தார் முன்னிலையாக அந்த நல்லூர் வட்டார கல்வி அலுவலர் ஸ்டாலின்ராஜசேகர் முன்னிலை வகித்தார்.

கம்பரசம்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஆர்.பி. புஷ்பவள்ளி ரவிச்சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஆர்.பி. ரவிச்சந்திரன் மணிவேல் அண்ணாதுரை, திலகா ஸ்டோர் உரிமையாளர் கதிரேசன், சமூக ஆர்வலர் பார்வதி சத்யநாராயணன், வட்டார வளமை மேற்பார்வையாளர் மீனா தயாள ரூபன், ஸ்டேட் பாங்க அசிஸ்டன்ட் மேனேஜர், சுந்தரஸ்வரி ஸ்டேட் பேங்க் ஆசோசஸிட்டேட் மேனேஜர் ஆகியோர் வாழ்த்துரையாற்றினார்கள்

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட என்.ஆர்.ஐ. ஏ. ஸ்.அகாடமி டைரக்டர் விஜயலாயன் பேசும்போது…. மாணவர்களிடம் படிப்பு, அறிவு, திறமை இந்த மூன்றும் இருந்தாலே வாழ்கையில் முன்னேற்றம் காண இயலும் என்று கூறினார். மேலும் தனியார் பள்ளிக்கு மேலாக அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி அதற்கு உதாரணமாக செயல்படுகிறது என்றார்.

அரசு பள்ளி மாணவர்கள் மிக உயர்ந்த பதிவிகளை வகிக்க முடியும். உயர் பதவியில் உள்ளவர்கள் பெரும்பாலும் அரசு பள்ளியில் படித்தவர்கள் தான் என்றார். மேலும் மாணவர்கள் தங்கள் பள்ளியில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் மாணவர்கள் வரும் காலத்தில் டாக்டர். போலீஸ். கலெக்டர். ஆக வேண்டும் என்பதனை விழிப்புணர்வாக மாணவர்களிடம் எடுத்துரைத்து பேசினார். 

மேலும் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் அனுராதா நன்றியுரை கூறினார் முன்னதாக மாணவர்களுக்கு எழுது பொருட்கள், அலமாரி மற்றும் பரிசுகள் வழங்கினார்கள். இவ்விழாவில் சகாயமேரி சந்திரா, சகாய செல்வி, சுமதி, ஜோசபின் நம்பிக்கை மேரி லூமின் ஜார்ஜினா, ஜெயந்தி, ஹெலன் பிரேமா,ஜான்சன், ஜெயராமன், புவி, சந்துரு, சிவகுருநாதன் அந்தநல்லூர் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மேலாண்மை குழு உறுப்பினர்கள் 

இல்லம் தேடி தன்னார்வலர்கள் சத்துணவு பணியாளர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் சேர்ந்த உறுப்பினர்கள் அன்னையர் குழு உறுப்பினர்கள் கிராம கல்வி குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந் து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *