திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி சென்னையிலிருந்து விமான மூலம் இன்று (06.10.2023) திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தார்.
திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு, திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
திமுக மகளிர் அணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டர் அணிச் செயலாளர் நாமக்கல் ராணி, மகளிர் அணி இணைச் செயலாளர் குமரி விஜயகுமார், மகளிர் தொண்டர் அணி இணைச் செயலாளர் தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ, மகளிர் அணி மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி தலைமையில் திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நாளை 7ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9:00 மணிக்குத் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இதில் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு புதிய மகளிர் அணி நிர்வாகிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றுகிறார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments