திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழா நடக்க இருப்பதையொட்டி 695 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று போக்குவரத்துத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருநாள் (26.11.2023) அன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 06:00 மணிக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டும், (27.11.2023) அன்று பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும், (25.11.2023) சனிக்கிழமை முதல் (27.11.2023) வரை
அனைத்து பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்.கும்பகோணம்) கோட்டத்தின் மூலம் சிறப்பு பேருந்துகள் கும்பகோணம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருச்சி. கரூர், காரைக்குடி, இராமேஸ்வரம், புதுக்கோட்டை மற்றும் கும்பகோணம் கோட்டத்தின் பிற முக்கிய நகரங்களிலிருந்தும் மேற்கண்ட நாட்களில் 695 சிறப்பு பேருந்துகள் பக்தர்கள் வசதிக்காக இயக்கப்பட உள்ளது.
திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து பக்தர்கள் கிரிவலப்பாதை சென்று திரும்பிவருவதற்கு வசதியாக சிற்றுந்துகள் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது
பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய ஏதுவாக https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments