டாக்டர் கலைஞர் அவர்களின் 4-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாநகர செயலாளரும் மாநகராட்சி மேயருமான அன்பழகன் ஆகியோர் தலைமையில் திருச்சி தில்லை நகர், அண்ணாமலை நகர் பகுதியில் இருந்து கலைஞர் அறிவாலயம் வரை அமைதி ஊர்வலமாக சென்று கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அவர்களின் திருஉருவ சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.இதனை தொடர்ந்து பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, பரணிகுமார் டோல்கேட் சுப்பிரமணி வழக்கறிஞர்கள் ஓம் பிரகாஷ் பாஸ்கர், பகுதிச் செயலாளர்கள் கண்ணன் காஜா மலர் விஜய் ராம்குமார் மோகன்தாஸ் இளங்கோ வழக்கறிஞர் கவியரசன் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments