4 வயதே நிரம்பிய சிறுமி, தென்தமிழ்நாட்டின் தென்காசி நகரைச் சேர்ந்தவள். அவளது பெற்றோர்கள் வசதியற்றவர்கள் மற்றும் தினக் கூலி பணியாளர்கள்.இச்சிறுமி பிறந்து 2 மாதங்கள் கால அளவில் உடல் மிகவும் நீல நிறமாக மாறியதால் மருத்துவமனைக்கு வேகமாக அழைத்துச் செல்லப்பட்டாள். ஒருசிக்கலான இதய நோய் அவளுக்கு இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டது. இதயத்தின்மேல் மற்றும் கீழறைகளுக்கு இடையே பெரிய அளவிலானதுளைகள் இருக்கும் பாதிப்பு நிலை அவளுக்கு இருந்தது. அத்துடன், இயல்புக்குமாறான இதய வால்வுகளும் மற்றும் இதயத்துக்கும், நுரையீரலுக்கும் இடையே இணைப்பு நிலை இல்லாததும் கண்டறியப்பட்டது.
வசதியற்ற இந்த குடும்பத்தின் நிலைமையை புரிந்து கொண்ட மருத்துவர்கள், அந்நேரத்தில், அதிக பொருட் செலவில்லாத அறுவை சிகிச்சையை அக்குழந்தைக்கு செய்ய முடிவு செய்தனர். குடலின் மேற் புற பகுதியிலுள்ள சிரைகளை நேரடியாக நுரையீரல்களோடு இணைப்பதன் வழியாக நுரையீரல்களுக்கு இரத்த ஓட்டம் மேம்படுத்தப்படுவதற்கு இந்த அறுவை சிகிச்சை வழி வகுத்தது.
இந்த அறுவை சிகிச்சை சில ஆண்டுகள் வரை நன்றாக செயலாற்றியது மற்றும் ஒரு இயல்பான குழந்தையாக அவள் வளர்ந்து வந்தாள். எனினும், 4 ஆண்டுகள் வயதை அவள் கடந்தபோது, நுரையீரல்களுக்கான இரத்த ஓட்டம் போதுமானதாக இருக்கவில்லை மற்றும் மிக எளிதாக அவள் களைப்படையத் தொடங்கினாள்.அவளது இதய பிரச்சனைக்கு ஒரு முழுமையான பழுது நீக்கல் பணி அறுவை சிகிச்சையின் மூலம் செய்யப்படுவது அவளுக்கு அவசியமானது. அவளது இதயத்திலுள்ளதுளைகள் மூடப்படுவதும், வால்வுகள் பழுது நீக்கப்படுவதும் மற்றும் இதயத்திற்கும் நுரையீரல்களுக்கும் இடையே தொடர்புநிலை நிறுவப்படுவதும் இந்த அறுவை சிகிச்சையில் இடம் பெற வேண்டிய அம்சங்களாக இருந்தன.
இதற்கும் கூடுதலாக, இரத்த ஓட்டத்தை இயல்பானதாக மாற்றுவதற்கு முந்தைய அறுவை சிகிச்சையை அகற்றுவதும் தேவையாக இருந்தது. இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவ வல்லுநரின் திறன்மிக்க கைதிறனும் மற்றும் நன்கொடை அளிக்க முன்வந்த பல நல்ல உள்ளடங்களின் தாராளமனதும், இந்த பழுது நீக்கல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்படுவதை உறுதிசெய்தன.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு முதல் 3 மாதங்கள் வரை இச்சிறுமி எவ்வித பிரச்சனைகள் இல்லாமல் தொடக்கத்தில் நன்றாக இருந்தாள். ஆனால், அவள் காலையில் விழித்தெழும்போது அவளது கண்கள் வீங்கி இருப்பதை அவளது பெற்றோர்கள் கவனித்தனர். அத்துடன், தலைவலிப்பதாகவும் இச்சிறுமி தெரிவிக்கத்தொடங்கினாள். ஆகவே, கவலையில் ஆழ்ந்த அவளது பெற்றோர்கள் உள்ளூர் மருத்துவர் ஒருவரிடம் அவளை அங்கு அழைத்துச் சென்றபோது ஒரு எக்கோ கார்டியோகிராம் சோதனை செய்யப்பட்டது. இதயத்தோடு மீண்டும் இணைக்கப் பட்டிருந்த உடலின் மேற்புற பகுதி சிரையான Superior Vena cava ( SVC)-யில் அடைப்பு இருப்பதை அச்சோதனை வெளிப்படுத்தியது.
நம் நாட்டில் பெரிய மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான இதய சிகிச்சைமையங்களில் மட்டுமே வழக்கமாக செய்யப்படுகிற SVC ஸ்டென்டிங் என்ற ஒருதனிச்சிறப்பான சிகிச்சை செயல்முறை அச்சிறுமிக்கு செய்யப்படுவது அவசியமாக இருந்தது. இந்த ஸ்டென்ட்bன் விலை மற்றும் சிகிச்சை செயல்முறைக்கான கட்டணத்தை செலுத்தும் அளவுக்கு நோயாளியின் குடும்பத்தில் நிதி வசதி இல்லை. பொருத்தப்படும் ஸ்டென்ட்-ற்கான தொகையை ஏற்றுக் கொள்ள நன்கொடையாளர்கள் மீண்டும் ஒருமுறை ஒப்புக்கொண்டு அதைவழங்கின. சிகிச்சை செயல்முறைக்கான கட்டணத்தை குறைத்துக் கொள்ள மருத்துவமனைநிர்வாகமும் தாராள மனதுடன் முன் வந்தது. இதய மயக்கவியல் குழுவினரை கவனமான கண்காணிப்பின் கீழ், இந்த சிக்கலான சிகிச்சை செயல்முறை இச்சிறுமிக்கு செய்யப்பட்டது. இச்செயல்முறையின் போது, குறுகி இருக்கின்ற சிரை என்ற பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்க ஒரு ஸ்டென்ட் பொருத்தப்பட்டது.
இச்சிகிச்சை செயல்முறை வெற்றிகரமாக முடிவடைந்த பிறகு அடுத்தநாளே தலைவலியும் மற்றும் கண்பகுதியைச் சுற்றியுள்ள வீக்கமும் அச்சிறுமிக்கு காணாமல் போனது. மீண்டும் ஒரு எக்கோகார்டியோகிராம் சோதனையை அச்சிறுமிக்கு நாங்கள் செய்வதற்கு முன்னதாகவே அடுத்த நாள் காலையில், தனது மகளின் கண்களில் எந்தவீக்கமும் காணப்படவில்லை என்பதை கவனித்த அந்த குழந்தையின் அம்மாவின் மகிழ்ச்சியான முகமும், புன்னகையுமே, இந்தசிகிச்சை செயல்முறை வெற்றி பெற்றிருப்பதைசுட்டிக்காட்டியது.
குழந்தைகளுக்கான இதயநல நிபுணர் டாக்டர் மணிராம்கிருஷ்ணா, குழந்தைகளுக்கான இதய மயக்கவியல் நிபுணர்கள் டாக்டர் பிரவின் மற்றும் டாக்டர் கருப்பைய்யா மற்றும் காவேரி ஹார்ட்சிட்டியில் பணியாற்றுகிற கேத்லேப்-ன் ஒட்டுமொத்த குழுவினர் உட்பட காவேரி ஹார்ட்சிட்டியின் குழுவினருக்கு இச்சிறுமியும், அவளது குடும்பத்தினரும் தங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.தங்களது குழந்தைக்கு வெற்றிகரமாக சிகிச்சையளித்து இயல்பான வாழ்க்கையை வாழவகை செய்த மருத்துவமனை நிர்வாகத்திற்கும் தங்களது நன்றி உணர்வை அவர்கள் உணர்ச்சி பூர்வமாக வெளிப்படுத்தினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve
Comments