Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி அரசு மருத்துவமனையில் 11 வது முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

 திருச்சிராப்பள்ளி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில். ஏழாவது முறையாக மூளை சாவு அடைந்தவர் உடலில் இருந்து சிறுநீரக உறுப்பு எடுப்பு மற்றும் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவாப் தோட்டம், உறையூரைச்சேர்ந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் மூளையில் பக்கவாதம் ஏற்பட்டு 27.11.2022 அன்று பெங்களுரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் அவருக்கு மூளைச் செயலிழப்பு இருப்பதை மருத்துவர்கள் தெரிவித்தனர். பிறகு அவர்கள் சொந்த ஊரான திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது என்பதை உறவினர்களிடம் தெரிவித்தனர்.

இதனை உணர்ந்த இறந்தவரின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் அவருடைய உடல் உறுப்புகளை தானம் அளிக்க முன் வந்தனர். மேலும் அவருடைய உறுப்புகளான கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் ஆகிய உறுப்புகளை தானம் செய்தனர்.

மேலும் Transtan வழிகாட்டுதலின்படி, உடல் உறுப்பு வேண்டி பதிவு செய்தவர்களின் வரிசையின் படி. தகுதியான நபருக்கு தானமாக பெறப்பட்ட உறுப்புகளில், மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஒருவருட காலமாக மூச்சுத்திணறல் இரத்தக்கொதிப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்ற பாதிப்புகளுடன் அனுமதிக்கப்பட்ட 57 வயது மதிக்கத்தக்க நோயாளிக்கு ஒரு சிறுநீரகம் இம்மருத்துவமனை முதல்வர் மரு.D.நேரு, மருத்துவ கண்காணிப்பாளர் மரு.E.அருண்ராஜ், அவர்களின் வழிகாட்டுதலின்படி, சிறுநீரகவியல் துறை மருத்துவர்கள் மரு.பாலமுருகன், மரு.பிரகாஷ், மரு.P.பிரபாகரன், மரு.V.ரவி, மரு.M.சந்தோஷ்குமார். மரு.மகேஷ்வரன், மரு.ராஜேஷ், மரு.மைவிழிசெல்வி, மற்றும் மயக்கவியல் துறை மருத்துவர்கள் மரு.சுரேஷ். மருராஜராஜன் இவர்கள் மூலம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக, வெற்றிகரமாக பொருத்தப்பட்டு நோயாளி நலமுடன் உள்ளார்.

இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையானது நமது மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 11-வது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆகும். மற்றொரு சிறுநீரகம் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும் பொருத்தப்பட்டன. கல்லீரல் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும் பொருத்தப்பட்டன.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

     
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *