திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் உள்ள கடைவீதியில் கரும்புச்சாறு கடை நடத்தி வந்த பெண், கரும்பு பிழியும் இயந்திரத்தில் அவருடைய துப்பட்டா சிக்கியதில் கழுத்து இறுகி சம்பவ இடத்திலேயே பலியானார்.
மணச்சநல்லூர் அருகே தெற்கு தத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. இவருடைய மனைவி இளவரசி(32). இவர்களுக்கு் நிஷாந்தினி என்ற 6 வயதில் மகளும், பத்ரிநாத் என்ற 4 வயது மகனும் உள்ளனர். திருப்பதி மண்ணச்சநல்லூர் எதுமலை சாலையிலும், இவரது மனைவி இளவரசி மண்ணச்சநல்லூர் திருச்சி சாலையில் உள்ள கடைவீதியிலும் கரும்புச்சாறு கடை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று கரும்புச்சாறு பிழிய கரும்பை இயந்திரத்தில் வைத்த போது எதிர்பாராத விதமாக இளவரசி துப்பட்டா கரும்பு இயந்திரத்தில் சிக்கியது. அருகில் யாரும் இல்லாத நிலையில் அவர் கழுத்தை துப்பட்டா சுற்றி இறுக்கியதால் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இது குறித்து தகவலறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
Comments