திருச்சியை அடுத்துள்ள கிள்ளுக்கோட்டை கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீவனதுர்க்கை அம்மன் ஆலயத்தின் சித்திரை திருத்தேர்விழா கடந்த 6ம்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
தினசரி வனதுர்க்கை அம்மன் யாளிவாகனம், மயில்வாகனம், காமதேனு வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் தினசரி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார்.
இவ்விழாவின் முக்கிய திருவிழாவான திருத்தேர் வடம்பிடித்தல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வனதுர்க்கை அம்மன் சிறப்பான அலங்காரத்தில் பல்லக்கில் வீதிஉலாவந்து பின்னர் மிகப்பெரிய எழிலுடன் அலங்கரிக்கப்பட்டிருந்த திருத்தேரில் எழுந்தருளி காட்சியளித்தார்.
தொடர்ந்து பல்வேறு கிராமங்களிலிருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வந்து வழிபட்டனர். தேரோடும் வீதிகளில் அசைந்தாடி வந்த திருத்தேரின் அழகு காண்போரை கவர்ந்திழுக்கச் செய்தது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.co/nepIqeLanO
Comments