கிருஷ்ண பகவான் இப்புவியில் அவதரித்த தினமான கிருஷ்ண ஜெயந்தி இன்று உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்ய வேண்டும் என்ற கிருஷ்ண பகவான் போதித்த அறிவுரைகளை பரப்ப வேண்டிய
இத்தருணத்தில் கொரோனா காலத்தில் மக்களை காக்கும் பணியில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட முன்கள பணியாளர்களான மருத்துவர், செவிலியர், காவலர்கள், துப்புரவு பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
திருச்சி அரியமங்கலம் நேருஜி நகரில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்த சிறுவர் சிறுமியர்கள் 20க்கும் மேற்பட்டோர் முன்கள பணியாளர்களின் சிறப்பான பணியை பாராட்டும் வகையில் கையில் பதாகைகளை ஏந்தியபடி, முன்களப்பணியாளர்களின் கருத்துகளை ஏற்று நடக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை மற்றும் அரசு அறிவுறுத்தியபடி
அனைவரும் தனிமனித இடைவெளியை பின்பற்றி, முகக் கவசம் அணிய வேண்டும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்பதனை வலியுறுத்தி நேருஜி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஊர்வலமாகச் சென்று பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கி கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments