திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் தாளகுளத்துப்பட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ந.தங்கபாண்டியன் (35). இவருக்கும் அருகே உள்ள அணியாப்பூர் சந்தைபேட்டை பகுதியினை சேர்ந்த போதும்பொண்ணு (22) என்பருக்கும் திருமணமாகி மூன்றரை வயதில் பெண் குழந்தையும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையில் போதும்பொண்ணு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டின் வாசலில் கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்த நிலையில் தலை, கை என 8 இடங்களில் கூர்மையான ஆயுதத்தால் வெட்டி கொடூரமாக தங்கபாண்டியன் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துணை கண்காணிப்பாளர் ந.ராமநாதன், காவல் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் தலைமையிலான போலீஸார் இரத்த வெள்ளத்தில் கிடந்த தங்கபாண்டியன் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நிகழ்விடத்தில் தடயங்களை சேகரித்துள்ள வையம்பட்டி போலீஸார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிராமத்தில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments