திருச்சி மாவட்டம், லால்குடியில் அமைந்துள்ள அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோயில் பங்குனித் தேரோட்டம் நடைபெற்றது.
லால்குடி அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோயில் திருத்தவத்துறை என்னும் லால்குடியில் அமைந்துள்ளது. இக் கோயில் எழு முனிவர்களுக்கு அருள் செய்ததால் பெருமானுக்கு சப்தரிஷீஸ்வரர் என்று இக் தலத்திற்கு திருத்தவத்துறை என்று அழைக்கப்படுகிறது.
இக் கோயிலின் பங்குனித் திருவிழாவின் கொடியேற்றம் விழா மார்ச் 18 ம் தேதி கோயில் கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இரவு சோமாஸ்கந்தர் புறப்பாடும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மார்ச் 19 ம் தேதி முதல் 25 ம் தேதி வரை தினசரி காலை பல்லாக்கு புறப்பாடும், தினசரி இரவு 7 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் புறப்பாடு, திருவீதி உலாவும் நடைபெற்றது.
விழாவின் 9 ம் நாளான இன்று வெள்ளிக்கிழமை சுவாமி எழுந்தருளி கலை நயமிக்க 75 உயரமுள்ள மிகப் பழமையான மரத்தாலான தேரோட்டம் நடைபெற்றது.
தேரோடத்தில் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன் மற்றும் லால்குடி, நன்னிமங்கலம், சாத்தமங்கலம், மும்முடிசோழமங்கலம., இடையாற்றுமங்கலம், திருமங்கலம், ஆங்கரை, மணக்கால் உள்ளிட்ட 10 திற்கும் மேற்பட்ட கிராம்மக்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் மனோகரன், மற்றும் கோயில் பணியாளர்கள் பக்தர்கள் செய்திருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
Comments