திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சைமலை பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக பச்சை மலைக்கு செல்லும் பாதையில் 13 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
சோபனாபுரத்திலிருந்து டாப் செங்காட்டுப்பட்டி செல்லும் சாலையில் 7 இடங்களிலும் மூலக்காட்டில் இருந்து மணலோடை செல்லும் சாலையில் ஆறு இடங்களிலும் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
தற்போது வனத்துறையினர் ஜேசிபி எந்திரம் கொண்டு மண்சரிவை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மண்டல வனப்பாதுகாவலர் சதீஷ் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட வன அலுவலர் கிரண் அவர்களின் மேற்பார்வையில் துறையூர் வன சரகர் பொன்னுசாமி தலைமையிலான வனப் பணியாளர்கள் ஜேசிபி எந்திரம் கொண்டு மண்சரிவை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/CPlniGdgtVjJshLPGFrWRq
டெலிகிராம் மூலமும் அறிய… https://t.me/trichyvisionn
Comments