Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

இலங்கை அகதிகள் முகாமில் காவல் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றத்தில் சிசிடிவி கேமரா நவீன காவல் கட்டுப்பாட்டு அறை தொடக்கம்

திருச்சி மாநகர காவல் ஆணையர் கடந்த 01.07.2021 அன்று கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை பார்வையிட்டு முகாம் வாசிகளிடம் கலந்துரையாடினார்கள். அவர்களது குறைகளை கேட்ட மாநகர காவல் ஆணையர் அவற்றை நிவர்த்தி 
செய்யும் வகையில் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். கடந்த 19.07.2021 அன்று முகாம் வாசிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், நடத்தப்பட்டது. 22.07.2021 அன்று முகாமில் காவல் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் (Police Boys & Girls Club) துவக்கி வைக்கப்பட்டது.

26.07.2021 தேதியன்று இலவச சட்டப்பணிகள் குழு மூலம் முகாம்வாசிகள் தங்களது தாய்நாட்டில் சொத்துக்களை திரும்பப் பெறுவதற்கான சட்ட ஆலோசனை வழங்கப்பட்டது. 02.08.2021 தேதியன்று தமிழக அரசு மறுவாழ்வுதுறை மற்றும் பெர்ல் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இலவச தொழிற்பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. 04.08.2021-ந்தேதி முகாமில் சுற்றுச்சுவரின் ஒருபகுதி சிதிலமடைந்துள்ளதால், அந்நிய நபர்கள் அனுமதியின்றி உள்ளே பிரவேசிப்பதை தடுக்க முகாம் வாசிகளின் கோரிக்கையின் பேரில், சிதிலமடைந்த சுவர் புதியதாக கட்டப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, இன்று 06.08.2021-ம் தேதி திருச்சி மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையர் சு.சக்திவேல் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், திருச்சி மாநகர காவல்துறை மற்றும் புங்கே தனியார் நிறுவனத்துடன் இணைந்து முகாம் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டும், அதனை நவீன காவல் கட்டுப்பாட்டறையுடன் இணைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளது. முகாமில் நிறுவப்பட்டுள்ள காவல் சிறுவர் சிறுமியர் மன்ற நூலகத்திற்கு புத்தகங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் கண்டோன்மெண்ட் சரக காவல் 
ஆளினர்களால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகாம் வாசிகளுக்கு முகக்கவசம், சானிடைசர் ஆகியவை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மூலம் வழங்கப்பட்டு எதிர்வரும் கொரோனா மூன்றாம் அலை தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டது. இத்தொடர் செயல்பாடுகளுக்கு முகாம் வாசிகள் திருச்சி மாநகர காவல்துறைக்கு 
தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளார்கள்.

மேலும் இப்பணியை சிறப்பாக செய்த கண்டோன்மெண்ட் சரக காவல் ஆளிநர்கள், பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் தனியார் நிறுவனத்திற்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் பாராட்டுதலை தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/IBy8wyy7jdhEKVBGDROeon

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *