மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று குற்றவியல் சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல திருச்சியில் ஜங்ஷன் ரயில் நிலையத்தை வழக்கறிஞர்கள் முற்றுகையிட முயன்றனர். ஜூலை ஒன்றாம் தேதி முதல் மூன்று சட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.
அன்றைய நாள் முதலே தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. திருச்சியில் உள்ள மத்திய அரசு அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் லிருந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து மூன்று சட்டத்திருத்தங்களை எதிர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் அகிலை மதிப்பதற்காக பேரணியாக வந்தனர் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினர் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் வழக்கறிஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments