திருச்சி மாவட்டம் துறையூர் நீதிமன்றத்தில் இன்று வழக்கறிஞர் சங்க தேர்தல் நடைபெற்றது. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகள் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு தலைவர்களுக்கு மட்டும் போட்டி நிலவியது.
எனவே தலைவர் பதவிக்காக வழக்கறிஞர் உத்திராபதி மற்றும் வழக்கறிஞர் தென்னரசு ஆகியோர் இருவரும் போட்டியிடுகின்றனர். இதனால் இருவரும் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் விதிமுறை பின்பற்றப்பட்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இன்று நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் வாக்களித்து வருகின்றனர். 126 வழக்கறிஞர்கள் வாக்கு அளிக்க தகுதியாக உள்ளவர்களாக இருக்கின்றனர்.
மற்ற பதவிகளான செயலாளர் சுகுமார், பொருளாளர் சிதம்பர ஜோதி, துணைத் தலைவர் கவின் குமார், இணை செயலாளர் பாஸ்கரன், செயற்குழு உறுப்பினர்கள் பாஹிரதி, நிர்மல் குமார் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். தலைவர் பதவிக்கு வாக்கு பதிவு முடிந்த உடன் இன்று மாலை வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்படுவார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments