திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில். பொதுமக்களுக்கு பத்திர பதிவின் போது, காணமல் போன அசல் ஆவணத்திற்கு நாளிதழ்களில் பொது அறிவிப்பு செய்தும் காவல்நிலையத்தில் உரிய புகார் அளித்து அதற்கான சான்றிதழ் பெற வேண்டும். பின் அவற்றை பத்திர பதிவாளர் அலுவலகத்தில் சமர்பித்த பின்னே நிகழ் பத்திர பதிவுகள் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில் பொதுமக்கள் காவல் நிலையத்திலிருந்து பெறப்படும் சான்றிதலுக்காக மாத கணக்கில் காத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் உரிய முறையான வழிகாட்டுதலை காவல் நிலை அதிகாரிகள் பொதுமக்களுக்கு தெரிவிப்பதில்லை என்றும், முறையான வழிகாட்டுதலுக்கு பொதுமக்களை அலைகலைப்பதாகவும் தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.
இந்நிலையில் சிலர் வழக்கறிஞர்கள் மூலம் இந்த பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றனர். ஆனாலும் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்களும் அலைகழைக்கப்படுவதாக கூறப்படுகிறது. வழக்குகள் தொடர்பாக காவல் நிலையம் செல்லும் வழக்கறிஞர்களுக்கு உரிய மரியாதை அளிப்பதில்லை என்பதும் வழக்கறிஞர்களை அவமானம் செய்யும் வகையில் காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகள் பேசுவதாகவும் வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் இது தொடர்பாக காவல் ஆய்வாளிடம் புகார் அளித்தும் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் ஆய்வாளர் பேச்சையே கேட்காமல் அலட்சியப் போக்குடன் மெத்தனமாக இருந்து வருவதாகவும் வழக்கறிஞர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் வழக்கறிஞர் குழந்தைவேல் என்பவர் தன்னுடைய வழக்காடிக்காக கடந்த பிப்ரவரி மாதம் அளித்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் வழக்கறிஞர் குழந்தைவேல் என்பவர் தன்னுடைய வழக்காடிக்காக கடந்த பிப்ரவரி மாதம் அளித்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில, இன்று காவல் நிலையத்தில் அலட்சியப்போக்குடன் செயல்பட்டு வருவதாக கூறப்படும் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமதியை கண்டித்து காவல் நிலையம் உள்ளையே தர்ணாவில் ஈடுபட்டார்.
அவருடன் சக வழக்கறிஞர்கள் ஜெயவீரபாண்டியன், ராஜமாணிக்கம், பரந்தாமன் ஆகியோரும் தர்ணாவில் ஈடுபட்டதால் காவல்நிலையம் பகுதி முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. காவல்நிலையத்தில், காணமல் போகும் அசல் ஆவணத்திற்கான முறையான சான்றிதழ் வழங்குவதில் அலட்சியம் காட்டும் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமதியை கண்டித்து வழக்கறிஞர்கள் காவல்நிலையத்தில் உள்ளேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments