Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

தலைவர்கள் பட்டியல் மோடிக்கு மீண்டும் முதல் இடம் !!

உலகின் பிரபல தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார். ஜி 20 உச்சி மாநாட்டை கடந்த 9,10 தேதிகளில் டில்லியில் நடத்தி உலகளாவிய பாராட்டுக்களை பிரதமர் மோடி அள்ளிக்கொண்டுள்ளார். இந்த தருணத்தில் வடஅமெரிக்காவின் மார்னிங் கன்சல்ட் அமைப்பு உலக தலைவர்களின் பிரபலம் குறித்து கடந்த 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை ஒரு சர்வே நடத்தி அதன் முடிவுகளை நேற்று வெளியிட்டது

இதன்படி உலகில் பிரபலமான 22 தலைவர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிரதமர் மோடி மீண்டும் பெற்றிருக்கிறார். அவர் 76 சதவிகித ஒப்புதல் மதிப்பீட்டுடன் முதல் இடத்தை வகிக்கிறார். கடந்த சில ஆண்டுகளாகளாகவே இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர், பிரதமர் மோடி என்பது சிறப்பு.

அவருக்கு அடுத்தபடியாக வந்து 2ம் இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டின் அதிபர் அலெய்ன் பெர் செட்டை விட 12 சதவிகிதம் கூடுதல் ஆதரவு பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட தலைவர்களை மோடி பின்னுக்குத்தள்ளி இருக்கிறார் என்பதாகும். பட்டியலில் முதல் 10 இடம் பிடித்துள்ள தலைவர்கள், அவர்களது ஒப்புதல் மதிப்பீட்டு விகிதமும்…

1. நரேந்திர மோடி – 76 சதவீதம் (இந்திய பிர தமர்)

2. அலெய்ன் பெர்செட் – 64 (சுவிட்சர்லாந்து அதிபர்)

3. ஆண்ட்ரஸ் மேனுவல் லோபஸ் ஒப்ரடார் – 61 (மெக்சிகோ அதிபர்)

4. லூயிஸ் டா சில்வா – 49 (பிரேசில் அதிபர்)

5. அந்தோணி அல்பா – 48 ( ஆஸ்திரேலியா பிரதமர்)

6. ஜியார்ஜியா மெலெனி – 42 ( இத்தாலி பிரதமர்)

7. ஜோ பைடன் – 40 (அமெரிக்க அதிபர்) 

8. பெட்ரோ சான்சேஸ் – 39 (ஸ்பெயின் அதிபர்)

9. லியோ வரத்கர் – 38 (அயர்லாந்து பிரதமர்)

10. ஜஸ்டின் ட்ரூடோ – 37 (கனடா பிரதமர்)

22 உலகத்தலைவர்களின் பிரபலத்தில் கடைசி இடத்தில் இருப்பவர், தென்கொரிய அதிபர் யூன் சூக்யோல், செக் குடியரசு அதிபர் பீட்டர் பாவெல் ஆகியோர் ஆவார்கள். இவர்களுக்கு 20 சதவிகித ஆதரவு மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *