திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து, முக்கொம்பு வழியாக பெட்டவாய்த்தலை வரை செல்லும் LSS அரசுப் பேருந்து இன்று பிற்பகல் பயணிகளை ஏற்றிக்கொண்டு சத்திரத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது. குடமுருட்டி பாலத்தை அடுத்த கம்பரசம்பேட்டை தடுப்பணை முன்பு அரசு பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்தது.
அப்போது நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் இறங்கியதுடன் அங்கிருந்த உயர் அழுத்த மின் கம்பத்தில் மோதி நின்றது. பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அச்சத்துடன் கத்தி கூச்சலிட்டனர், தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் போலீசார் உதவியுடன் பேருந்தில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த அரசு பேருந்து விபத்தில் 5 பயணிகள் காயம் அடைந்தனர்.
பின்னர் காயமடைந்த பணிகள் அனைவரையும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தனியார் பேருந்தை போல அரசு பேருந்துகளை அதிவேகத்தில் இயக்குவதால் தொடர்ந்து இதுபோன்ற விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய….. https://t.co/nepIqeLanO
Comments